பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் உயிரிழந்த குட்டி திமிங்கலம்!

  Newstm Desk   | Last Modified : 03 Jun, 2018 03:00 pm
whale-dies-from-eating-more-than-80-plastic-bags

தாய்லாந்தில் 80க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை விழுங்கியதால் திமிங்கலம் ஒன்று உயிரிழந்தது.

உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. இதற்கு, தாய்லாந்தும் விதிவிலக்கு இல்லை. இதனால் சுற்றுப்புறச் சூழல், கடல் வளம், விலங்கினங்களுக்கு கடல் வாழ் உயிரனங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. தாய்லாந்தில் வருடத்திற்கு நூற்றுக்கணக்கான கடல் உயிரினங்கள் அழிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) மதியம் மலேசியாவின் எல்லை அருகே ஒரு கால்வாயில் சிறிய ஆண் திமிங்கலம் ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை அறிந்து கால்நடை மருத்துவக் குழு அங்கு விரைந்து வந்து அந்த திமிங்கலத்திற்கு சிகிச்சை அளித்தனர்.

அப்பொழுது பைலட் திமிங்கலம் ஐந்து பிளாஸ்டிக் பைகளை வாந்தி எடுத்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இதையடுத்து திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்தனர். அப்பொழுது அந்த திமிங்கலத்தின் வயிற்றுப் பகுதியில் இருந்து 80க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது. அதன் மொத்த எடை 8  கிலோ ஆகும் இருக்கும் என்று கடல் உயிரியல் நிபுணர் தான் தாம்ரங்கநாவவத் தெரிவித்தார். 

சிறிய ஆண் பைலட் திமிங்கலம் பிளாஸ்டிக் பைகளை அதிக அளவில் விழுங்கியதால் உயிரிழந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகள் கடலில் கலப்பதால், கடல் வாழ் உயிரினங்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. திமிங்கலம், மீன், ஆமை, பறவை போன்றவை பிளாஸ்டிக் பைகளை உட்கொள்வதால் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன. உலக நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இன்னும் சில ஆண்டுகளில் கடலில் பிளாஸ்டிக் மட்டும்தான் இருக்கும்... மீன்கள் இருக்காது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close