ஐ.நா. அதிகாரிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் மிரட்டல்!

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 05:47 pm

philippines-duterte-tells-un-expert-to-go-to-hell

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட்டால் நரகத்துக்கு தான் செல்ல வேண்டி இருக்கும் என்று பிலிப்பைன்ஸுக்கான ஐ.நா அதிகாரிக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ மிரட்டல் விடுத்துள்ளார். 

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே தன்னை எதிர்க்க கூடியவர்களுக்கு பொதுவெளியில் நேரடியாக மிரட்டல் விடுக்கும் மனோபாவம் கொண்டவர். சர்வதிகார போக்குடன் செயல்படும் இவரது நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த மரியா லூர்தஸ் செரினோ, எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

இதனால் அவரை தன்னுடைய எதிரி என்று கூறிய ரோட்ரிகோ துதர்தே, அவரை தலைமை நீதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாக்கெடுப்பு நடத்தி, மரியா லூர்தஸ் செரினோவை பதவி நீக்கம் செய்தனர். 

இது விவகாரம் குறித்து பிலிப்பைன்ஸுக்கான ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் மூத்த அதிகாரியான கார்சி-சயான் வேதனை தெரிவித்தார். "ரோட்ரிகோ துதர்தே, மரியா லூர்தஸ் செரினோவுக்கு எதிராக பொதுவெளியில் மிரட்டல்கள் விடுத்ததே, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம்" என குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் ரோட்ரிகோ துதர்தே, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, தன் மீது கார்சி-சயான் முன்வைத்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "அவரிடம் (கார்சி-சயான்) சொல்லுங்கள், என் நாட்டின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று, இல்லையென்றால் அவர் நரகத்துக்கு செல்ல வேண்டி இருக்கும்" என பகிரங்க மிரட்டலை விடுத்தார். 

மேலும், "அவர் ஒன்றும் சிறப்பான நபர் இல்லை. அவருடைய பதவியை நான் அங்கீகரிக்கவேயில்லை" என்றும் மரியா லூர்தஸ் செரினோவை குறிப்பிட்டு தெரிவித்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.