ஜூன்.04, 2018 - உலக செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 10:10 pm
breaking-world-news

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குல் மதகுருமார்கள் உள்பட 14 பேர் பலி

ஆபகானிஸ்தான்  தலைநகர் காபூலில்  முக்கிய மதகுருமார்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 14 பேர் உயிரிழந்தனர்.உயிரிழந்த 14 பேரில் 7 பேர் மத குருக்கள்  மற்றும் 4 பேர் பாதுகாப்பு படை வீரர்கள் ஆவர். மீதமுள்ள 3 பேர் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

வாட்ஸ் ஆப், பேஸ்புக் பயன்படுத்தினால் வரி

உகாண்டா நாட்டில் ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றை பயன்படுத்தும் நபர்களுக்கு வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 

புலம்பெயர்ந்த துனிசியர்கள் படகு மூழ்கியது; 50 பேர் பலி

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்த துனிசியர்கள் பயணித்தப் படகு மூழ்கியதில் 50 பேர் மூழ்கி பலியாகினர். இதுவரை 68 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு உலகில் முதல் முறையாக அறுவை சிகிச்சை

பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு உலகில் முதல் முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீனின் தோல்கள் மூலம் பிறப்புறுப்பு வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு: பாலஸ்தீன மருத்துவ தன்னார்வலர் பலி

இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீன மருத்துவ தன்னார்வலர் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் பாலஸ்தீன மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close