காபூல் பல்கலைக்கழகத்தின் அருகே இன்று ஏற்பட்ட ஒரு தற்கொலை குண்டு தாக்குதலில், இஸ்லாமிய அறிஞர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் அருகே, ஒரு கூடாரத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் இன்று சந்தித்தனர். அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அவர்கள் சந்தித்ததாக கூறப்படுகிறது. நாட்டில் நடைபெற்று வரும் போர் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதல்கள் போன்றவற்றிற்கு எதிராக ஃபத்வா கொடுக்க அவர்கள் முடிவெடுத்தனர்.
சந்திப்பை முடித்துவிட்டு அவர்கள் வெளியே வந்தபோது, தன் மீதிருந்த வெடிகுண்டுகளை ஒரு தீவிரவாதி வெடிக்கச் செய்தான். இதில், 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலில் 12 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அது மாற்றியமைக்கப்பட்டது.