படம் பேசுது: அசுத்தத்துக்கு பெயர் போன கடற்கரை!

  Padmapriya   | Last Modified : 05 Jun, 2018 06:52 pm

thanh-hoa-vietnam-beach-with-tide-of-blue-waste

வியட்நாமின் தான் ஹோ கடற்கரை மணல் பரப்பே காண முடியாத அளவுக்கு குப்பைகளால் மூடப்பட்டிருக்கும் காட்சியை இந்தப் படத்தில் பார்க்க முடியும். இயற்கையின் பேரழிவுக்கு வித்திடும் சூழலை கண்முன்னே ஏற்படுத்தப்பட்டிருப்பதை உலக சுற்றுச்சூழல் தினமான இன்று குறிப்பிட்டு இயற்கை ஆர்வலர்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர். கரையின் ஒருபுறம் கடலோர காடுகளின் மரங்கள் வரிசைகட்டி நிற்க, மறுபுறம் இப்படி பிளாஸ்டிக் கழிவுகளால் சூழப்பட்டு இருக்கிறது.

சுற்றுலாவுக்கு ஏற்ற இடமான வியட்நாமின் எழில்மிகு தான் ஹோ கடற்கரை முழுக்க பிளாஸ்டிக் கழுவுகளாலும் குப்பைகளாகவும் போர்த்தப்பட்டு அசுத்தத்துக்கு பெயர் போனதாகிவிட்டது. இனியும் விழித்துக்கொள்ளவில்லை எனில், வியட்நாமில் ஏற்பட்டுள்ள நிலை நாளை எல்லா நாடுகளிலும் எதிரொலிக்கும் என்று எச்சரிக்கின்றனர் சுற்றுசூழல் ஆர்வலர்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close