தரையில் சிந்திய காஃபியை சுத்தம் செய்த நெதர்லாந்து பிரதமர்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Jun, 2018 04:18 am

netherland-pm-mark-rutte-cleans-up-his-coffee-spill

நெதர்லாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தன் கையிலிருந்து தவறி சிந்திய காஃபியை அந்நாட்டு பிரதமர் மார்க் ருட்டே சுத்தம் செய்துள்ளார்.

நெதர்லாந்து பிரதமராக இருப்பவர் மார்க் ரூட். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்து சென்றிருக்கும்போது மார்க் கையில் இருந்த காஃபி கைத்தவறி கீழே விழுந்துவிட்டது. அப்போது மார்க் அருகில் இருந்த பணியாளர்கள் கையில் வைத்திருந்த துடைப்பத்தை வாங்கி சிந்திய காஃபியை தானே சுத்தம் செய்தார். துடைப்பத்தை பயன்படுத்த தெரியாமல், தடுமாறிய அவர், அருகில் இருந்த துப்புரவு பணியாளர்களிடம் ஆலோசனை கேட்டு தூய்மை படுத்தினார்.

பிரதமரின் இந்த செயலுக்கு உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கைத்தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர். பிரதமர் என்றும் பாராமல் தரையை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். 

மார்க் பொதுவாக எளிமையை கடைப்பிடிப்பவர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு அந்த நாட்டு மன்னரை, மார்க் சந்திக்க சைக்கிளில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close