ஜூன்.06, 2018 - உலக செய்திகள்

  Padmapriya   | Last Modified : 06 Jun, 2018 08:23 pm

breaking-world-news

மோனிகா லெவின்ஸ்கியிடம் மன்னிப்பு கோரிய முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்

அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரது உதவியாளராக இருந்தவர் மோனிகா லெவின்ஸ்கி. அப்போது இருவருக்குமிடையே தவறான உறவிருந்ததாக புகைப்படங்களோடு ஊடகங்களில் செய்தி வெளியானது.

நியூயார்க் நகரில் தமது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்ட பில் கிளிண்டன், பார்வையாளர்களிடையே உரையாற்றினார். அப்போது சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்பம் குறித்த MeToo ஹேஷ்டாக் குறித்து பாராட்டு தெரிவித்தார். மோனிகாவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, அவரது குடும்பத்தினர், அமெரிக்க மக்கள் மற்றும் அமைச்சர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார்.

கவுதமாலாவில் மீண்டும் எரிமலை வெடிப்பு: பலி 72 ஆக உயர்வு; மீட்பு பணியில் சிக்கல்

கவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை மீண்டும் வெடித்துள்ளது. இதில் பலியானார் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. எரிமலை வெடித்து அதிலிருந்து வெப்ப வாயு மற்றும் உருகிய நிலையிலான பாறைகள் ஓடை போல் வெளிவருகின்றன.  கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் இந்த எரிமலை வெடிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனால் மீட்பு பணியாளர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் மலை குன்றின் அடியில் சாம்பல் புகைக்கிடையே புகலிடம் தேடி தஞ்சமடைந்து உள்ளனர்.


எத்தியோப்பியாவில் 6 மாத நெருக்கடி காலம் தளர்த்தப்பட்டது

எத்தியோப்பியாவில் 6 மாத காலத்திற்கு விதிக்கப்பட்டிருந்த நெருக்கடி காலம் முடிய இன்னும் 2  மாத காலம் இருந்த நிலையில் சற்று முன்னதாகவே தளர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக அக்டோபர் 2016ம் ஆண்டு  10 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தபட்டது. அப்போது ஏற்பட்ட போராட்டங்களால்  நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர், 10,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக வங்கியின் முன்னாள் அதிகாரியை பிரதமராக நியமித்து ஜோர்டான் மன்னர் உத்தரவு

மக்கள் போராட்டத்தை அடுத்து ஜோர்டான் பிரதமராக இருந்த ஹனி அல் முல்கி ராஜினாமா செய்ததை அடுத்து, உலக வங்கியில் பணியாறிய ஓமர் ரஸ்ஸாஸ் புதிய பிரதமராக நியமித்து மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். 

செல்போன் நிறுவனங்களுடன் தகவல் பரிமாற்றம்: ஒப்புக்கொண்டது பேஸ்புக்

செல்போன் நிறுவனங்களுக்கு தனது பயனீட்டாளர்கள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் போட்டுக்கொண்டதை பேஸ்புக் ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம் எந்த செல்போனில் பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறதோ, அந்த செல்போன் நிறுவனம் பயன்பாட்டாளர் மற்றும் அவர்களது நண்பர்களின் தகவல்களை தெரிந்து கொள்ளும் படி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

 

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஸ்வீடனில் போராட்டம்

சுவீடன் நாட்டின் கோத்தென்பர்க் நகரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிமேலும், கோத்தென்பர்க் வாழ் மக்களின் சார்பாக, அனைவரும் கையெழுத்திட்ட   கோரிக்கை மனு இந்திய தூதரகத்திற்கு, சுவீடனின் பிரதமர், துணை பிரதமர், வெளியுறவு அமைச்சர், வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோருக்கு அனுப்ப உள்ளதாகவும் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் தெரிவித்தனர்.ராகவும், தூத்துக்குடி மக்களின் பாதிப்பிற்கான நீதிக்காகவும் 100ற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.