அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியாவுக்கு 137வது இடம்

  Padmapriya   | Last Modified : 08 Jun, 2018 08:38 am
india-ranks-137th-on-global-peace-index-2018

உலக அளவில் அமைதியான நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியாவுக்கு 137வது இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான  நிதி ஆதாரம் தேடாத நிறுவனம் நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில் அமைதியான நாடுகள் குறித்த ஆய்வை நடத்தி அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

இதில், ஐஸ்லாந்து முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐஸ்லாந்து இந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து, ஆஸ்ட்ரியா, போர்ச்சுகல், டென்மார்க் ஆகிய நாடுகள் முதல்  5 இடங்களில் உள்ளன. 

அமைதியற்று இருக்கும் சிரியா

மிகவும் பின்தங்கி அமைதியற்ற நாடாக 163வது இடத்தில், போர் சூழ்ந்து சிரியா திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  கடந்த 5 ஆண்டுகளாக சிரியா இறுதியான இடத்தில் உள்ளது. சிரியாவுக்கு பின்னே கீழ் நிலையில் ஆப்கானிஸ்தான், ஈராக், சோமாலியா ஆகிய  நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதிக இறப்பு:

சிரியாவில் அதிகளவிலான இறப்பு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நாட்டுக்கு கீழ் நிலையில் அடுத்தடுத்த இடங்களில் மெக்சிகோ, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஏமன் நாடுகள் உள்ளன. 

இந்தியாவுக்கு 4 இடங்கள் முன்னேற்றம்:

கடந்த ஆண்டு இந்த வரிசையில் 141வது இடத்திலிருந்த இந்தியா இம்முறை 137வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

ஆய்வு அறிக்கையின்படி, "இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் குறைந்த நிலையில் இருப்பதும் அதற்காக சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுமே காரணம். அதெ நிலையில்,  காஷ்மீரில் அவ்வப்போது அமைதியின்மை நிலவியது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் இருத்தரப்பிலும் அமைதியற்ற சூழலும் உயிரிழப்பும் இருந்தது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவை போல இலங்கை, ச்ஹாட், கொலம்பியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் வன்முறையால் நிகழும் இறப்பு விகிதம் குறைந்து இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுதக் குவிப்பு:

உலகின் நிலவும் சூழல் காரணமாக, எதிர்பாராத விளைவுகளைத் தவிர்க்க, கடந்த 30 ஆண்டுகளாக நாடுகள் ஆயுதக் குவிப்பில் ஈடுப்பட்டு வருவதாகவும். இவற்றில் அண்டை நாடுகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள எகிப்து, இந்தியா, ஈரான், பாகிஸ்தான், தென் கொரியா, சிரியா ஆகிய நாடுகள் ஆயுதக் குவிப்பில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close