ஜூன்.07, 2018 - உலக செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 07:30 pm

breaking-world-news

கவுதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 99 ஆனது

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள் ளது.

கவுதமாலா நாட்டின் தென் பகுதியில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள எரிமலைகளில் மிகவும் அபாயகரமான எரிமலையாக இது கருதப்படுகிறது.

ஈராக் தேர்தல் முடிவில் நீடிக்கும் குழப்பம்- மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவு

ஈராக் பாராளுமன்றத் தேர்தலில் ஷியா மதகுரு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து ஏற்பட்ட குளறுபடிகள், முறைகேடு புகார்களையடுத்து கைகளால் மீண்டும் வாக்குகளை எண்ண பாராளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் பூமியின் ஒரு நாள் 25 மணி நேரமாக இருக்கும்

எதிர்காலத்தில் பூமியின் ஒரு நாள் 25 மணி நேரமாக மாறி இருக்கும் என்று புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.

140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம் கிமீட்டர் தூரம் விலகி சென்று உள்ளது.  140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்  பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது  தற்போது 24 மணி நேரமாக உள்ளது.

நிலவு வருடத்திற்கு 3.82 சென்டி மீட்டர் விலகி சென்றுள்ளது.சென்று கொண்டு இருக்கிறது  இவ்வாறு செல்வதால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிகம் தூரம் சென்று விடும் இதனால் பூமியின் சுற்றும் வேகத்தி மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

 

அமெரிக்காவில் 1 கி.மீ தூரம் ரிவர்ஸில் சென்ற கார்

அமெரிக்காவின் பரபரப்பான சாலை ஒன்றில் ஒரு கார் ஒரு கிலோமீட்டருக்கும் அதிக தூரம் பின்நோக்கியே சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஓஹியோவில் சுமார் 1.2 கிலோமீட்டர் தூரத்தை பின்நோக்கி அதிவேகத்தில் கடந்த இந்தக் கார் 4 நிமிடத்தில் பார்க்கிங் பகுதி ஒன்றில் நிறுத்தப்பட்டது.

ஆனால் கார் ஓட்டுநர் ஏன் பின்நோக்கி காரை இயக்கினார் என்பது குறித்த தகவல் கிடைக்காத நிலையில் காரில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறினர்.

 

67 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு: பிரான்ஸில் மக்கள் பார்வைக்கு

67 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் எலும்புக்கூடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜூராசிக் பார்க் படங்களில் கார்களையும் மக்களையும் புரட்டிப் போட்டு பீதியைக் கிளப்பும் டைனோசர்களில் முக்கியமானது, டி ரெக்ஸ் என்று அழைக்கப்படும் டைரானோசாரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus Rex) உயிரினமாகும்.

அமெரிக்காவின் மாண்டெனா என்ற இடத்தில் கடந்த 2013ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு 41 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்டதாக உள்ளது. 5 டன் எடை கொண்ட டி ரெக்ஸ்சின் முழுமையான எலும்புக்கூடு இருப்பது இதுவே முதன்முறை என்று அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் (Jurassic World: Fallen Kingdom) படம் இன்று உலகம் முழுவதும் திரையிடப்படும் நாளில் இந்த எலும்புக் கூடும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.