புதைக்கப்பட்ட குழந்தை... 7 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jun, 2018 10:59 pm
brazilian-infant-rescued-seven-hours-after-being-buried-alive

பிரேசில் நாட்டில், இறந்துவிட்டது என நினைத்து புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்ட அதிசயம் அரங்கேறியுள்ளது.

பிரேசில் நாட்டில், கனரனா பகுதியில் உள்ள தம்பதியினருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து சிறிது நேரத்திற்கு குழந்தையிடம் எந்த விதமான அசைவும் இல்லாததால் குழந்தை இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். தங்கள் விதியை நொந்த பெற்றோரும், அந்தக் குழந்தையை அடக்கம் செய்தனர். 7 மணி நேரம் கழித்து குழந்தையை புதைக்கப்பட்ட இடத்திலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 2 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்தனர். குழந்தை அழுவதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. இறந்த குழந்தையை உயிருடன் மீட்டெடுத்த பெற்றோர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close