வீக்லி நியூஸுலகம்: 'முத்தம் தந்தா தப்பா? என்ற அதிபர்' முதல் 'பொதுவாழ்வில் குதிக்கும் காஃபி கடை அதிபர்' வரை

  Padmapriya   | Last Modified : 10 Jun, 2018 12:47 am
interesting-world-news-happenings-around-the-world

பொதுவாழ்வில் குதிக்கும் ஸ்டார்பக்ஸின் தலைமை செயலதிகாரி ராஜினாமா..

பிரபல அமெரிக்க காஃபி ஷாப் நிறுவனமான 'ஸ்டார்பக்ஸின்' (Starbucks) தலைமை செயலதிகாரி பதவியை, ஹாவர்ட் ஷெல்ஸ் ராஜினாமா செய்துள்ளார். 

உலகின் தலைசிறந்த காஃபி ஹாப் நிறுவனங்களில் ஸ்டார்பக்ஸ் முதன்மையானதாக திகழ்கிறது. நிறுவனம் இந்தளவு முன்னேற்றம் அடைந்ததற்கு அதன் தலைமை செயலதிகாரி ஷெல்ஸின் புத்தாக்க சிந்தனைகளே காரணம் என வர்த்தக உலகில் இன்றளவிலும் நம்பப்பஉகிறது. இந்நிலையில், பொது வாழ்வில் ஈடுபடவுள்ளதால் தமது பதவியை ராஜினாமா செய்வதாக ஷெல்ஸ் திடீரென அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், வர்த்தக உலகிற்கான தமது பங்களிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், இனி வரும் காலங்களில் பொது வாழ்வில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் பிரதான கட்சியின் வேட்பாளராக இவர் களமிறங்கும் வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு   ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது. 64 வயதாகும் ஷெல்ஸின் தலைமையில், கடந்தாண்டில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கரப்பான் பாலுக்கு வரப்போகும் மவுசு!

பூமியிலேயே மிகவும் சத்து நிறைந்த பால், கரப்பான் பால்தானாம். பிற்காலத்தில் கரப்பான் பால் சூப்பர் உணவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கரப்பான் பூச்சிகளில் ஒரு வகை, ‘பசிபிக் பீட்டில் கரப்பான்’. இதைச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆராய்ந்தபோது, முட்டைகளை வெளியே இடாமல், உடலுக்குள்ளேயே குஞ்சுகளை வளர்த்து, வெளியே விடுகிறது என்பதை அறிந்தனர். கரப்பானின் உடலுக்குள் சுரக்கும் வெளிர் மஞ்சள் நிறப் பாலை உண்டு வளர்ந்த பிறகே குஞ்சுகள் வெளியே வருகின்றன என்பதை விஞ்ஞானிகள் சமீபத்தில்தான் கண்டுபிடித்துள்ளனர்.

மாட்டின் பாலை விட 3 மடங்கு சத்து கரப்பான் பாலுக்கு இருக்கிறது என்கிறார்கள். “இந்தப் பாலில் புரோட்டீன், அவசியமான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், சர்க்கரை என்று ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால்தான் இந்தக் கரப்பான்பூச்சியின் குஞ்சுகள், மற்ற கரப்பான் குஞ்சுகளைவிட மிக வேகமாக வளர்கின்றன. இதில் சத்து அதிகம் இருந்தாலும் மனிதர்களுக்கு எவ்வளவு தூரம் பயன்படும் என்று சொல்ல முடியாது.

100 கிராம் கரப்பான் பாலைப் பெறுவதற்கு ஆயிரம் கரப்பான்பூச்சிகள் தேவைப்படும். பண்ணைகளில் கரப்பான்களை வளர்க்க முடியுமா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதிக அளவில் கரப்பான் பால் கிடைத்தால் காபியில் கலக்கலாம், ஐஸ்க்ரீம் செய்யலாம். அதற்கு முன்பு கரப்பான் பால் மனிதர்களுக்கு எவ்வளவு நன்மையளிக்கும் என்பதைப் பார்க்க வேண்டும்” என்கிறார் விஞ்ஞானி லியோனார்ட் சாவாஸ்.

உலகக் கோப்பை கால்பந்து போட்டி: வரவேற்கத் தயாராகும் ரஷ்யா

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்க உள்ளதை முன்னிட்டு அந்நாட்டின் சுற்றுலா பகுதிகள் விழாக் கோலம் பூண்டுள்ளன.

ரஷ்யாவின் கடற்கரை சுற்றுலா நகரமானன கலினின்கிராட் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  சூரியக்குளியல் எடுப்பதற்கு வசதியாக பலகைகள் மற்றும் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய உணவு வகைகளும் பயணிகளுக்கு விற்கப்படுகின்றன. பழமை வாய்ந்த கோட்டைகள் மற்றும் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. இப்போதே குவியத் தொடங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் கடற்கரைகளில் பொழுதைப் போக்கி வருகின்றனர். 

முத்த தந்தா தப்பா?- சீறிய பிலிப்பைன்ஸ் அதிபர்!

பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, பொதுநிகழ்ச்சி ஒன்றில் பெண்ணொருவருக்கு முத்தமிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. தென்கொரியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, அங்கே தென்கொரியா வாழ் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

இரண்டு புத்தகங்களை எடுத்து அதை வாங்க இரு பெண்களை அவர் அழைத்தார். புத்தகத்தை வழங்கி, தம்மிடம் முத்தம் வாங்கும் பெண்ணுக்கு, தாம் இலவசமாக புத்தகம் தருவதாக, ரோட்ரிகோ கூறினார். இதையடுத்து, மேடைக்கு வந்த பெண்ணின் நீண்ட கூச்சத்துக்குப் பிறகு, அவரது உதட்டில் ரோட்ரிகோ முத்தமிட்டார். அந்தப் பெண் மறுப்பு தெரிவித்தபோதும், அவரை டுடெர்டே வர்புறுத்தியதாக பெரிய சர்ச்சை எழுந்தது. தென்கொரியா, பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

எதிர்ப்புக்கு பதில் அளித்த டுடெர்டே, ”நான் நகைச்சுவைக்காகத் தான் அப்படிச் செய்தேன். அது என் ஸ்டைல். ஒரு சின்ன முத்தத்தில் எந்தத் தவறும் இல்லை. சில பெண்கள் அமைப்பினர் இதைப் பெரிதுபடுத்தி என்மீது பழி சுமத்துகிறார்கள். என் மீதான குற்றச்சாட்டு மனுவில் அதிகளவிலான பெண்கள் கையெழுத்திட்டால், பதவி விலகத் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார். 

MeToo விவகாரம்: மன்னிப்பு கேட்ட பில் கிளிண்டன்!

அமெரிக்க அதிபராக கிளிண்டன் இருந்தபோது, அவரது உதவியாளராக இருந்தவர் மோனிகா லெவின்ஸ்கி. அப்போது இருவருக்குமிடையே தவறான உறவிருந்ததாக புகைப்படங்களோடு ஊடகங்களில் செய்தி வெளியானது.

நியூயார்க் நகரில் தமது வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்ட பில் கிளிண்டன், பார்வையாளர்களிடையே உரையாற்றினார். அப்போது சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்பம் குறித்த MeToo ஹேஷ்டாக் குறித்து பாராட்டு தெரிவித்தார். மோனிகாவிடம் தவறாக நடந்து கொண்டதற்காக, அவரது குடும்பத்தினர், அமெரிக்க மக்கள் மற்றும் அமைச்சர்களிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close