இரு துருவங்களின் வரலாற்று சந்திப்பு: கவனிக்கத்தக்க விஷயங்கள் சில

  Padmapriya   | Last Modified : 12 Jun, 2018 11:24 am

changed-era-as-trump-north-korea-s-kim-gather-for-singapore-summit

60 ஆண்டு கால வரலாற்று பகையை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும், சந்திப்புக்காக அமெரிக்கா- வட கொரியா, இரு நாட்டு அதிபர்களும் சிங்கப்பூர் வந்தடைந்திருக்கின்றனர்.

சிங்கப்பூர் ஏன்? 

சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட பல காரணங்கள் உள்ளன. சிங்கப்பூர் அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுடனும் சமூகமா உறவைக்கொண்டுள்ளது. வடகொரியாவுக்கு பெரும்பாலான நாடுகளோடு தூதரக உறவே இல்லை. வடகொரியா தூதரகம் அமைத்துள்ள மிகச் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

நீண்ட காலமாக சிங்கப்பூர் வழியாக தான் வடகொரியா வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. சிங்கப்பூரில் போராட்டங்களும் பெருமளவில் தடை செய்யப்பட்டுள்ளதால், எதிர்ப்புகளுக்கும் போராட்டத்துக்கும் கவலைப்பட வேண்டியதில்லை.

சென்டோசா ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் சந்தித்துப் பேச உள்ளனர். 2011ம் ஆண்டு வடகொரிய தலைவராக பதவியேற்ற பின், சீனா தவிர்த்து முதன்முறையாக கிம் வெளிநாடு வந்துள்ளார். 
இங்கு சந்திக்க முக்கிய காரணங்கள் உண்டு. சென்டோசாவுக்கு செல்ல நேரடி போக்குவரத்து வசதி இல்லை. ரோப் கார் அல்லது தனியார் விமான சேவையை மட்டுமே பயன்படுத்த முடியும். ஏற்கெனவே தனியார் விடுதிகள் மூடப்பட்டுவிட்டதால், இரு தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இது ஏதுவான இடம். 

130 கோடி செலவை ஏற்கும் சிங்கப்பூர்:

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்புக்கு முன் சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ட்ரம்ப் - கிம் சந்திப்புக்காக சுமார் 136 கோடி ரூபாய் செலவாகும் என்றும், இந்தச் செலவைச் சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

ட்ரம்புக்கு முன்கூட்டியே பிறந்தநாள் கொண்டாடிய சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசியன் லூங் ட்ரம்புக்கு மதிய விருந்து அளித்தார். அப்போது மேஜையில் ட்ரம்ப் எதிர்பார்க்காத வகையில் அவருக்கு பிறந்தநாள் கேக் கொண்டு வந்து வைக்கப்பட்டது. வரும் 14-ம் தேதி ட்ரம்புக்கு பிறந்தநாள் வரும் நிலையில், முன்கூட்டியே கொண்டாடப்பட்டதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் ட்விட்டரில் புகைப்படம் வெளியிட்டு விளக்கம் அளித்தார். 

தனிப்பட்ட சந்திப்பு:

அமெரிக்க அதிபருடன் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், கிம் சாங் உன் மற்றும் ட்ரம்ப் இருவரும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இருவருக்குமான மொழிப்பெயர்ப்பாளர்கள் மட்டும் உடனிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் பேச்சுவார்த்தை முடிவு பெரும் நேரம் அறிவிக்கப்படவில்லை. 

தெருவுக்கு தெரு கூர்க்கா வசம்: 

இரு நாடுகளும் நீண்டகாலமாக கடுமையான எதிரி நாடுகளாக இருந்து வந்த நிலையில் இப்போது பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனவே அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக சிங்கப்பூர் அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.

பாதுகாப்பு பணி கூர்க்கா வீரர்களிடம் சிங்கப்பூர் அரசு ஒப்படைத்துள்ளது. மிகவும் விழிப்புடன் இருந்து கண்காணிப்பவர்கள் கூர்க்கா வீரர்கள் 
என்பதால் அவர்களை இந்த பணிக்கு சிங்கப்பூர் அரசு நியமித்துள்ளது. இதனால் சிங்கப்பூர் மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இருப்பினும் இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு தங்களது நாட்டில் நடப்பதை எண்ணி அவர்கள் பெருமிதம் அடைகின்றனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.