ஜூன்.12, 2018 - உலக செய்திகள்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 08:28 pm
breaking-world-news

அணு ஆயுத ஒழிப்புக்கு வட கொரியா சம்மதம்: 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து 

சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களை வெளியிட்டு உள்ளன.கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்களையும் வெள்ளை மாளிகையின் கூட்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.  கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.  ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது. அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசகருக்கு திடீர் மாரடைப்பு

சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு நடைபெற்றது. இதனிடையே கிம் ஜாங் அன் உடனான சந்திப்பிற்கு செல்லும் வழியில் அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வர்த்தக மற்றும் பொருளாதார ஆலோசகர் லெர்ரி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

4,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் ரோல்ஸ்ராய்ஸ் 

பிரிட்டனின் பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அனைத்து விதமான விமான என்ஜினின் கம்ப்ரசர்களிலும் பழுது ஏற்பட்டுள்ளதால் கடும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது. இதனால் போயிங் விமானங்கள் தரையிறக்கப்பட்டதுடன், தங்களது  வாடிக்கையாளர்களின் கோபத்தையும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இந்த பிரச்சினையை தீர்க்க கூடுதல் செலவாகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பணியாளர்கள் 50 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேரை நீக்க ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

எனக்கு வழக்காட யாரும் இல்லை: நவாஸ் ஷெரிப்

"எனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன.  நீதிமன்றத்தின் கண்டிப்பான நிலைமை காரணமாக எந்த வழக்கறிஞர் எனது வழக்கை வாதாடத் தயாராக இல்லை” என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள் என்று நவாஸ் ஷெரிப் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தால் டாப்பிங் செய்யப்பட்ட கோழிக்கறி: விலை ரூ.3000

அமெரிக்காவில் பார் ஒன்றில் தங்கத்துகள் பூசப்பட்ட கோழிக்கறி பரிமாறப்பட்டு வருகிறது. நியூயார்க் நகரில் உள்ள பார் ஒன்று, மது அருந்த வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்வதென யோசித்தது. அந்த ''பொன்னான'' யோசனையின் பலனாக சமைத்த கோழிக்கறியை தங்கத் துகள்களைத் தூவி பரிமாற முடிவெடுத்தது.

வழக்கமாக மசாலா தடவி பொறித்து எடுக்கும் கோழிக்கறி மீது, தவிடு போன்ற தங்கத்தில் தயாரான கிரீமில் தோய்க்கப்படுகிறது. வழக்கமாக பொன்னிறமாக பொறிக்கும் கோழிக்கறியை, அங்கு பொன்னாகவே வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர் பார் ஊழியர்கள். 10 துண்டுகள் கொண்ட இந்த கோழிக்கறியின் விலை, இந்திய மதிப்பில் மூவாயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close