ஜூன்.14, 2018 - உலக செய்திகள்

  Padmapriya   | Last Modified : 14 Jun, 2018 07:59 pm
breaking-world-news

மாலத்தீவு மாஜி அதிபருக்கு 19 மாதம் ஜெயில் தண்டனை

மாலத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயூம், 80 இவர் கடந்த 1978-ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்..அப்போதைய மாலத்தீவு அதிபராக இருந்த யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டியதாக மமூன் அப்துல் கயூம் அவரது சகோதரர் மற்றும் நீதிபதி அப்துல்லா சயீத் ஒருவர் உள்ளிட்டோர் பலர் மீது வழக்குப்பதியப்பட்டது. கடந்த பிப்ரவி மாதம் மம்மூன் அப்துல் கயூம் கைது செய்யப்பட்டார். நேற்றுநடந்த விசாரணையில் மமூன் கயூமிற்கு 19 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பொருளாதார தடைகளை நீக்க டிரம்ப் ஒப்புதல்: வட கொரியா தகவல்

சிங்கப்பூரில் நடந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் -உன் சந்திப்பில் வடகொரியா மீதான பொருளாதார தடையை விலக்கிக் கொள்வதாக டிரம்ப் உறுதியளித்துள்ளதாக , கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் இந்திய ராணுவம் அளவுக்கதிகமாக மனித உரிமை மீறல் : ஐநா அறிக்கைக்கு இந்தியா மறுப்பு

2016-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் இந்திய ராணுவம் அளவுக்கதிகமாக தங்களது வலுவைப் பிரயோகித்து நிறைய அப்பாவி பொதுமக்களைக் கொன்றும் காயப்படுத்தியும் கடும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது ஆகவே இது குறித்து பன்னாட்டு விசாரணை தேவை என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கப் படையினர் தாக்குதல்: சிரியாவில் ஒரே குடும்பத்தில் 12 பேர் பரிதாப பலி

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப் படையினர் நேற்று திடீரென நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதற்கு அதிபர் பஷார் அல் ஆசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிற நாடுகளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக வந்து செல்பவர்களுக்கு முதல் 48மணி நேரத்துக்கு அனைத்து நுழைவுக் கட்டணங்களில் இருந்தும் விலக்களிக்கவும், அதன்பின் 96மணி நேரம் வரை ஐம்பது திராம் கட்டணம் மட்டுமே விதிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close