புடினை சந்திக்க ரஷ்யா செல்லும் கிம் ஜாங்!

  Padmapriya   | Last Modified : 15 Jun, 2018 12:43 pm
vladimir-putin-invites-kim-jong-un-to-russia-in-september

ரஷ்ய அதிபர் புடினின் அழைப்பை ஏற்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்று உலகமே பயந்தது அமெரிக்கா - வட கொரியாவை பார்த்துத்தான். ஆனால், சில தினங்களுக்கு முன்பு இரு துருவங்களும் சிங்கப்பூரில் சந்தித்து பேசின. இதைத் தொடர்ந்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் விரைவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. கிம் ஜாங் உன், வருகிற செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து வடகொரிய அதிபர், ரஷ்ய அதிபருடன் விவாதிக்க உள்ளதாக வட கொரிய செய்தி ஊடங்கள் கூறுகின்றன. 

அமெரிக்காவுடனான அணு ஆயுத கைவிடல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடகொரிய அதிபரின் ரஷ்ய பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 12-ம் தேதி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையேயான சந்திப்பு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கெபெல்லா ஹோட்டலில் நடைபெற்றது.  உலக நாடுகள் உற்று நோக்கிய இந்த சந்திப்பு சுமார் 48 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்னை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் அணு ஆயுதத்தை ஒழித்திட இரு தரப்பிலும் உறுதி ஏற்கப்பட்டது. 

சர்வாதிகாரப் போக்கை கையாண்டு வந்த கிம் ஜோங், சமீப காலத்தில் மற்ற நாடுகளுடன் இணக்கமாக செல்லும் வகையில் செயல்பட தொடங்கியுள்ளார். இது உலகம் முழுமைக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close