சிங்கப்பூர் தமிழ் அமைச்சருக்கு வடகொரிய அதிபர் நன்றி

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2018 09:08 pm

balakrishnan-is-one-of-the-prominant-leader-of-singapore-and-he-is-the-only-person-who-had-spent-much-time-with-kim-jon-un-and-donald-trump

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடனான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சிங்கபூர் தமிழ் அமைச்சருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நன்றி தெரிவித்தார். 

ட்ரம்ப் - கிம் ஜாங் இருவருக்கும் இடையிலான சந்திப்பு அறிவிப்பானது முதல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார் பாலகிருஷ்ணன்.  சிங்கப்பூர் உச்சி மாநாடு வெற்றிபெற வாஷிங்டனுக்கும், வடகொரியத் தலைநகர் யாங்யாங்குக்கும், சீனாவின் பெய்ஜிங் நகருக்கும் தீவிரமாக பயணித்துச் சந்திப்பை முழுமை பெறச் செய்தார். இடையே அதிபர் ட்ரம்ப் தன்னிச்சையாக சந்திப்பை ரத்து செய்து அறிவித்தார். அதன்பின், வாஷிங்டனுக்குச் சென்று அவரை சமாதானம் செய்து, சந்திப்பு வெற்றிகரமாக நடக்கத் துணையாக இருந்தார்

இறுதியாக அறிவிக்கப்பட்டபடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான சிங்கப்பூர் சந்திப்பு சில தினங்களுக்கு முன்னர் நடந்தது. கிம் ஜாங் மேற்கொண்ட 2-வது அரசு முறை வெளிநாட்டு பயணம் இதுவாகும். 

சிங்கப்பூர் மாநாடு நடந்து முடிந்ததற்கு, சிங்கப்பூர் வெளி விவகாரத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் முக்கிய காரணமாக இருந்தார். இந்திய வம்சாவளி தமிழரான விவியன் பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆவார். தமிழ் சமூகத்தை சேர்ந்த தந்தைக்கும், சீன சமூகத்தை சேர்ந்த தாய்க்கும் மகனாக பிறந்தவர் பாலகிருஷ்ணன். 57 வயதாகும் பாலகிருஷ்ணனுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

2001-ம் ஆண்டு அரசியலில் நுழைந்து 2004-ம் ஆண்டில் இணை அமைச்சரானார். தொடர்ந்து சுற்றுச் சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகி, பின் 2015-ம் ஆண்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார். ட்ரம்ப் மற்றும் கிம் உடன் கணிசமான நேரத்தை செலவிட்ட ஒரே சிங்கப்பூர் தலைவர் இவராவார்.

இரு நாட்டு தலைவர்களின் குழுவை இணைப்பதில் முக்கிய பங்காற்றிய பால கிருஷ்ணன், வடகொரிய அதிபர் சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க சென்ற போது அவருடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.