ஏமனில் மீண்டும் உள்நாட்டுப்போர் வெடிப்பு? 100 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 16 Jun, 2018 03:24 pm
yemen-attack-hundreds-killed-as-rebels-grip-near-airport

ஏமன் அரசுப்படை மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே நடந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 100யைத் தொட்டுள்ளது. 

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஏமனில் சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா முஸ்லீம் பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இரு தரப்பினரில் அதிபருக்கு சவூதி அரேபியாவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன. கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள பகுதிகளை கைப்பற்றும்பொருட்டு  கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன்- சவூதி படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதே சமயத்தில் ஹவுதி படைகளும் தங்கள் இடங்களை காப்பாற்றிக்கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஏமனில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் உணவு கிடைக்காமல் மிகவும் தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலினால் சுமார் 85 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தாக்குதல் குறைந்திருந்த நிலையில் தற்போது ஏமனில் உள்நாட்டுப்போர் மீண்டும் வெடித்துள்ளது. கடந்த சில தினங்களாக நடந்த தாக்குதலில் இதுவரை 100 பேர் வரையில் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close