• விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு
  • ரிசர்வ் வங்கி ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் ராஜினமா!
  • பிரதமர் வேட்பாளர் யார்? - எதிர்க்கட்சிகளுக்கு பா.ஜ.க. கேள்வி
  • மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
  • கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை: அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்!

வீக்லி நியூஸுலகம்: 'ட்ரம்ப்பின் புலம்பல்' முதல் 'லீக் ஆனா மதுவுக்கு 200 கோடி செலவு செய்யும் கிம் சொத்துமதிப்பு' வரை

  Padmapriya   | Last Modified : 17 Jun, 2018 01:00 am

interesting-world-news-happenings-around-the-world

ஈஃபிள் டவருக்கு 280 கோடி செலவில் குண்டு துளைக்காத கண்ணாடி சுவர் 

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர், உலக அதிசயங்களில் ஒன்று. தினமும் நூற்றுக்கணக்கானோர் இதனைப் பார்க்க வருகை புரிகின்றனர். இதனை பாதுகாப்பதில் பிரான்ஸ் மிகவும் கவனம் கொண்டுள்ளது. தீவிரவாத அமைப்புக்களின் மிரட்டல் மற்றும் சுற்றுலா பயணிகளின் அதிகப்படியான படையெடுப்பு உள்ளிட்ட காரணங்களால் ஈஃபில் டவரைச் சுற்றிலும் கண்ணாடி சுவர் எழுப்பும்பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஈஃபிள் டவரின் வடக்கு மற்றும் தெற்கு முனைகளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வேலிகளுக்கு மாற்றாக கண்ணாடி சுவர் அமைக்கப்படுகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரின் போது, ஈஃபிள் டவரைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது 

6.5 செண்ட்டிமீட்டர் தடிமன், 3 மீட்டர் உயரம் மற்றும் ஒன்றரை டன் அளவிற்கு எடை கொண்டுள்ள இந்த கண்ணாடி துண்டுகள், ஈஃபிள் டவரைச் சுற்றிலும் பாதுகாப்பு அரணாக செயல்படவுள்ளன. 

மொத்தம் 450 கண்ணாடித் துண்டுகள், இரண்டு தனித்தனி சுவர்களாக எழுப்பப்படுகின்றன. 280 கோடி ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த பணியானது வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்துமே குண்டு துளைக்காத கண்ணாடிகளாம்.

மரத்தின் பிசினுக்குள் உயிரினம்!

மியான்மரில் டைனோசர் காலத்தில் தவளை இனங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. சிலநேரங்களில் மர பிசின்களில் சிக்கி தவளைகள் உயிரிழக்க நேரிடும். அவ்வாறு, 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மரத்தின் பிசினில் சிக்கி இறந்து போன, தவளையின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை தவளைகள், டைனோசர்களின் இறுதி காலக் காட்டங்களில் வாழ்ந்தவை எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், தவளை, தேரை வகைகள் வெப்ப மண்டலக் காடுகளில் இருந்து மழைக்காடுகளில் வாழும் பரிணாம வளர்ச்சியை அடைந்திருப்பது தெரியவந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

குழந்தைகளை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்க இந்தியா மறுப்பு - யுனிசெப் தகவல்

அரசு அலுவலங்களில் பணியாற்றும் கர்ப்பிணிகளுக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதுபோல குழந்தைகளை வளர்க்க தந்தைக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த நிலையில் ஐ.நா. சபையின் குழந்தைகள் வளர்ப்பு தொடர்பான யுனிசெப் அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியா உள்பட 90 நாடுகள் புதிதாக பிறந்த குழந்தைகளை வளர்க்க அதன் தந்தைக்கு பேறுகால விடுமுறை வழங்கப்படுவதில்லை என கண்டறிந்துள்ளது. 

ஊடகங்கள் தான் எனக்கு பிரச்னையே: வைரலான போட்டோ குறித்து ட்ரம்ப் விளக்கம்

“பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகங்கள்  கனடாவில் நடைபெற்ற   மாநாட்டில்,  ஜி 7 நாடுகளின் தலைவர்களுடன் நான் சுமுகமான  போக்கை கடைப்பிடிக்கவில்லை என்று கூறுகிறது. அவர்கள் தவறு என்று மீண்டும் நிருபித்திருக்கிறார்கள்.

நான் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலோ மெர்க்கலுடன் சிறந்த நட்புக் கொண்டிருக்கிறேன். ஆனால் பொய் செய்திகளை பரப்பும் ஊடகங்கள் வெறும் தவறான புகைப்படங்களை மட்டும் காட்டுக்கின்றன.  நான் வைத்த கோரிக்கைகளையும், ஒப்பந்தங்களையும் பிற அமெரிக்க அதிபர்கள் வைத்திருக்க மாட்டார்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஜி 7 மாநாட்டில் பிற நாட்டுத் தலைவர்களுடன் தான் எடுத்த கொண்ட புகைப்படத்தையும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

மதுவுக்கு ரூ.198 கோடி செலவு செய்யும் கிம் ஜாங்கின் சொத்து மதிப்பு லீக்?

34 வயதான வட கொரிய அதிபர் கிம் ஜாங்கின்,  நடப்பு ஆண்டின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 8 பில்லியன் பவுண்ட் வரை இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் பாதி கிம் சட்ட விரோதமாக சம்பாதிக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளது.  தந்தம் கடத்துதல், போதை பொருள் கடத்தல் போன்றவைகள் மூலம் கிடைத்ததாக ஐ.நா. தகவல் ஒன்று கூறுகிறது. 

பல நாடுகளில் கிம்மிற்கு வங்கி கணக்குகள் இருப்பதாகவும், குறிப்பாக ஐரோப்பியா, ஆசியா போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் உள்ளதாம்.

கிம் தன்னுடைய பணத்தை எப்படியெல்லாம் செலவு செய்கிறார் என்பதை பிரபல கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் கூட கூறியுள்ளார். கிம் ஆண்டிற்கு சுமார் 440 மில்லியன் பவுண்ட்டை செலவு செய்கிறார், அதில் 22 மில்லியன் பவுண்ட் மதுபானம் குடிப்பதற்கே செலவு செய்து வருகிறார். 5 மில்லியன் மதிப்பு கொண்ட கப்பல், குண்டு துளைக்காத மெர்சிடஸ்  கார்கள் மற்றும் பனிச்சறுக்கு ரிசார்ட் வைத்துள்ளார். ரிசார்ட்டிற்கு மட்டும்  25 மில்லியன் பவுண்ட் செலவு செய்துள்ளதாகவும், அந்த பனிச்சறுக்கு ரிசார்ட் சுமார் 70 மைல் தூரம் கொண்டது எனவும் கூறப்படுகிறது.

கிம்மிற்கு உணவு என்றால் அவ்வளவு பிடிக்கும், மாட்டு கறியின் மீது அதிக விருப்பம் கொண்ட இவருக்கு ஜப்பானில் இருந்து மாடுகள் இறக்கப்படுகிறதாம். பல சொகுசு வீடுகளை கொண்டுள்ள இவருக்கு முக்கியமான வீடு என்றால் வடகொரியாவின் பியோங்யங் பகுதியில் உள்ள சொகுசு வீடு தானாம், அந்த வீட்டில் 1000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு சினிமா தியேட்டர் உள்ளதாகவும், 7 மில்லியன் பவுண்ட் கொண்ட கைக்கடிகாரங்கள் அவரிடம் உள்ளது எனவும் கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.