காணாமல் போன பெண் உடல் மலைப் பாம்பு வயிற்றில்!- இந்தோனேசியாவில் அதிர்ச்சி

  Newstm Desk   | Last Modified : 17 Jun, 2018 12:54 am

7-metre-long-python-swallows-indonesian-woman

இந்தோனேசியாவில் காணாமல் போனதாக தேடப்பட்ட பெண்ணின் உடல் மலைப் பாம்பின் வயிற்றில் இருந்தது அங்கு அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

இந்தோனேசியாவின் முனா என்ற தீவில் பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (54). கடந்த வியாழக்கிழமை தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற வா திபா வீட்டிற்கு திரும்பாத நிலையில் கிராம மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.  கிராமமெங்கும் உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் நேற்று 23 அடி நீள மலைப்பாம்பு ஒன்று எங்கும் செல்ல முடியாமல் உருண்டு வந்து உள்ளது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மலைப்பாம்பின் வயிற்று பகுதியை வெட்டி பார்த்தனர். அப்போது வா திபாவின் சடலம் பாம்பின் வயிற்றின் உள்ளே இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சடலத்தை மீட்டு அந்தப் பெண்ணுக்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் தான் வா திபாவின் செருப்பு கிடந்துள்ளது. அவருடைய தலையை முதலில் விழுங்கியுள்ள பாம்பு பின்னர் உடல் பகுதியை உள்ளே இழுத்து இருக்கிறது. திபாமிகவும்வின் தோட்டம் செங்குத்தான பாறைகள், குகைகள் என கரடு முரடான பகுதியில் உள்ளதால், அங்கு பாம்புகள் நடமாட்டம் சாதாரணமானது என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close