நைஜீரியாவில் இரட்டை தற்கொலை குண்டு தாக்குதல்; 31 பேர் பலி

  Newstm News Desk   | Last Modified : 18 Jun, 2018 05:50 am

31-killed-in-nigeria-twin-suicide-blasts

நைஜீரியாவின் போர்னோ நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல்களில் பொதுமக்கள் 31 பேர் கொல்லப்பட்டனர். 

போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு தொடர்ந்து நடத்தி வந்த தாக்குதல்களால் நைஜீரியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தீவிரவாத அமைப்பை ஒழிக்க, நைஜீரிய ராணுவம் சிறப்பு படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தங்களது நடவடிக்கை வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்து, தீவிரவாதிகள் பிடியில் இருந்த பகுதிகளில் இருந்து மாறி சென்ற மக்களை அங்கு திரும்ப, சமீபத்தில் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டது. 

இந்நிலையில், நேற்று திடீரென போர்னோ பகுதியில் இரண்டு தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும், தாக்குதலை தொடர்ந்து, அந்த பகுதியில் பல இடங்களில் ராக்கெட் குண்டுகள் வந்து விழுந்தன. பலர் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.

ஆனால்,  இந்த தாக்குதல்களுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், திட்டமிடலை பார்த்தால், இது போகோ ஹராமின் செயல் போல தான் தெரிகிறது என நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close