விபத்தில் சிக்கிய கம்போடிய இளவரசர்: மனைவி பலி!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 12:12 pm

wife-of-cambodia-s-prince-ranariddh-dies-in-road-accident

தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது ஏற்பட்ட கார் விபத்தில் கம்போடிய இளவரசர் படுகாயம் அடைந்ததாகவும். மேலும் அவரது மனைவி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. 

கம்போடியாவில் ஜூலை 29-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் அந்நாட்டின் இளவரசரும், முன்னாள் பிரதமருமான நோரோடோம் ரனாரித் போட்டியிடுகிறார். கம்போடிய மன்னர் சிஹாமோனியின் ஒன்றுவிட்ட சகோதரரான இவர், தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறார். 

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ரனாரித் மற்றும் அவருடைய மனைவி அவுக் பால்லா(39) இருவரும் நேற்று (திங்கள்கிழமை) பிரீச் ஷிஹானுக் மாகாணத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாடகை கார் அவர்கள் பயணித்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரனாரித்தும், அவுக் பால்லாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சில மணி நேரத்துக்கு பின்பு அவுக் பால்லா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் என தெரிவிக்கப்பட்டது. 

ரனாரித் படுகாயமடைந்து தொடர் சிகிச்சையில் உள்ளார். ரனாரித் 1993-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை கம்போ டியாவில் பிரதமராக பதவி வகித்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.