ஆப்கானில் தலிபான் தீவிரவாதிகள் பயங்கரத் தாக்குதல்; 30 வீரர்கள் பலி

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2018 11:26 am

30-afghan-security-forces-killed-in-taliban-attacks

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிபயங்கர தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 30 பேர் பலியாகியுள்ளனர். 

ரம்ஜான் பண்டிகையையொட்டி, ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 3 நாட்களாக எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. மேலும், தலிபான்களும், பாதுகாப்புப்படையினரும் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டு செல்ஃபியும் எடுத்துக்கொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து போர் நிறுத்தம் மேலும் 10 நாட்களுக்கு தொடரும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரஃப் கனி அறிவித்தார். இதனை தலிபான் அமைப்பினர் ஏற்றுகொள்ளவில்லை.

ரம்ஜான் பண்டிகை முடிந்ததால் தாக்குதலை தொடரலாம் என அமைப்பு கூறியதற்கு இணங்க, நேற்று பட்கிஸ் பகுதியில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஆப்கான் பாதுகாப்புப்படை வீரர்கள் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தலிபான் தீவிரவாதிகளின் அதிபயங்கர கொடூரத் தாக்குதலாக பார்க்கப்படுகிறது.தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close