பெண் செய்தியாளருக்கு நேரலையில் முத்தமிட்ட ரசிகர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 22 Jun, 2018 06:22 am
reporter-groped-in-russia-during-live-world-cup-broadcast

ரஷ்யாவில் கால்பந்து போட்டி குறித்து மைதானத்திற்கு முன் நின்று செய்திகளை நேரலை செய்து கொண்டிருந்த பெண் பத்திரிக்கையாளரை ரசிகர் ஒருவர் சீண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டியூட்ஸ்செ வெல்லே எனும் ஸ்பானிஷ் செய்தி தொலைக்காட்சியில் ஜூலியத் கோன்ச்டலேஸ் தேரான் என்ற செய்தியாளர் ரஷ்யாவில் நடக்கும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் செய்திகளை நேரலையாக வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத ஒரு நபர், ஜூலியத் கோன்சலேஸ் தேரானின் கன்னத்தில் முத்தம் கொடுத்திவிட்டு நகர்ந்துள்ளார். இருப்பினும் தேரான் அதை பெரிதுபடுத்தாமல் நேரலையை தொடர்ந்து வழங்கினார். இச்சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர் தேரான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நேரலையின்போது இளைஞர் ஒருவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நேரலை முடிந்த பிறகு அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். பெண் செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பும், மதிப்பும் இந்த சமூகம் வழங்குவதில்லை. பொது இடத்தில் இதுபோன்று செயல்படுவது மனதை புண்படுத்திகிறது. முதலில் பெண்களை ஆண்கள் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார். 

இதில் என்ன ஆச்சர்யம் என்றால் வீடியோவில் தெளிவாக இருக்கும் அந்த நபரை இன்னும் காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close