அல்ஜீரியாவில் பொதுத் தேர்வு: நாடு முழுவதும் இண்டெர்நெட் துண்டிப்பு 

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 07:40 pm
algeria-shut-down-internet-to-prevent-exam-cheating

அல்ஜீரியாவில் பொதுத் தேர்வுக்காக நாடு முழுவதும் இண்டெர்நெட் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 

அல்ஜீரியாவில் உயர் நிலை பள்ளிகளுக்கான டிப்ளமோ தேர்வில் மாணவர்கள் இணையம் மூலம் முறைகேடுகள் செய்வதை தடுக்கும் நோக்கத்தோடு நாடு முழுவதும் இண்டெர்நெட் சேவை தடைசெய்யப்பட்டது. 

2,000 மையங்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் டிப்ளமோ தேர்வை எழுதினர். தேர்வு நேரம் முடியும் வரை தேர்வு எழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க இணைய சேவை தடை செய்யப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக 2016-ம் ஆண்டு நடந்த தேர்வில் அதிக மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டனர். தேர்வு தொடங்கும் முன்னரே, கேள்வித் தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் சிக்கல் ஏற்பட்டது. 

இதன் அடிப்படையில், டிப்ளோமா தேர்வில் முறைகேடுகள் நடைப்பெறாமல் தடுப்பதற்காக இரண்டு மணி நேர இணைய சேவையை துண்டிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், நாடு முழுவதும் இணைய சேவை தடை செய்வதாக அல்ஜீரிய டெலிகாம் நிறுவனம் அறிவித்திருந்தது.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close