சீனா தான் முதல் கூட்டாளி: வட கொரிய அதிபர் கிம் 

  Padmapriya   | Last Modified : 22 Jun, 2018 07:40 pm
but-china-is-still-north-korea-s-most-important-ally

அமெரிக்காவுடன் புதிய உறவு கொண்டாலும் சீனா தான், வட கொரியாவுக்கு எப்போதுமே முதல் கூட்டாளி என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்புக்கு பின் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவுக்கு இரண்டு நாட்கள் பயணமாக சென்றார். வெளி நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளாத கிம் ஜான், சீனாவுக்கு 3 முறை சென்றுவிட்டார்.

இந்த முறை சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசினார். பயணத்தை முடித்து நேற்று (வியாழக்கிழமை) வடகொரியாவுக்கு கிம் புறப்பட்டார். இந்நிலையில், சீனா தான் தங்களின் முக்கிய கூட்டாளி என்றும் சீனாவின் நலனுக்கு எதிராக வடகொரியா செயல்படாது எனவும் நாடு திரும்பிய அவர் அறிவித்துள்ளார். இதையே சீன அதிபரிடம் தான் நேரில் தெளிவுபடுத்தியதாகவும் கூறியுள்ளார். 

மேலும், அனுஆயுத ஒழிப்பு, பொருளாதார தடைகள் உள்ளிட்டவை குறித்து கிம் ஜாங் ஆலோசித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close