மும்மடங்கு வேகத்தில் உருகும் அன்டார்டிகா: எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

  Newstm Desk   | Last Modified : 22 Jun, 2018 07:18 pm
antarctica-is-melting-faster-than-we-knew-here-s-what-it-will-take-to-save-it

அன்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகமாக உருகிக்கொண்டிருக்கிறது. தற்போது அது மும்மடங்கு வேகம்பிடித்திருப்பதால் இந்த நூற்றாண்டுக்குள் மோசமான அழிவுகளை சில நாடுகள் சந்திக்கப் போவது நிச்சயம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

ஐக்கிய அமெரிக்க நாடுகள், மெக்சிகோ நாடுகளை ஒன்று சேர்த்தால் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு வருமோ, அதற்கு இணையானது அன்டார்டிகா பனிப்பாறைகளின் அடர்த்தி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடல்நீர் மட்டம் உயர்வதற்கு அன்டார்டிகாவும் ஒரு முக்கியமான காரணம் என்பதை 11 விதமான செயற்கைக்கோள்களின் உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

உலக வெப்பமயமாதலின் அறிகுறிகள் கண்முன் தெரிய ஆரம்பித்துவிட்டன. கடந்த 1992-ம் ஆண்டு முதல் அன்டார்டிகாவின் 3 டிரில்லியன் டன் அளவு பனிப்பாறை உருகியுள்ளது. இதே அளவு பனிப்பாறைகள் உருகிக் கொண்டிருந்தால் கடற்கரையோர மக்களுக்கு நிச்சயமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். அன்டார்டிகாவின் பனிப்பாறைகள் உருகும் வேகம் தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 

அன்டார்டிகாவில் உருகிய பனிப்பாறைகள் சிறியதாக இருந்தாலும், இதே நிலை நீடிக்கும்போது அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதன் பாதிப்பு இப்போது கண் முன்னர் தெரிய ஆரம்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்த கடல்மட்ட உயரமே இதற்கு சாட்சி என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

பனிப்பாறை உருகுவதற்குக் காலநிலை மாற்றமும் ஒரு முக்கியமான காரணம்.  இதுபோன்ற பல தகவல்களை உலகம் முழுவதிலும் உள்ள 44 நிறுவனங்களைச் சேர்ந்த 84 துருவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்போது ஆண்டுக்கு 0.6 மி.மீ என்ற அளவில் உயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த 25 வருடங்களில் உயர்ந்த கடல் மட்டத்தை விட இப்போது கூடிவரும் அளவு அதிகம். மேற்குப் பக்கமாக தான் அன்டார்டிகா பனிப்பகுதி அதிக அளவு உருகிக்கொண்டிருக்கிறது. 

1992-ம் ஆண்டிலிருந்து வருடத்துக்கு 53 பில்லியன் டன் பனிப்பாறைகள் என்ற அளவில் உருகிக்கொண்டிருந்த பனிப்பாறைகள், 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளாக 159 பில்லியன் டன் பனிப்பாறை என்ற அளவில் உருகிக்கொண்டு வந்திருக்கிறது.  இது முன்னதாக கணக்கிட்ட 1992-ம் ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகம். இந்த நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் முடிவில் அன்டார்டிகாவின் மொத்தப் பனியும் உருகும் நிலைக்கு தள்ளப்படும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close