போரில் பிரிந்த குடும்பங்களை இணைக்கும் தென் கொரியா!

  Padmapriya   | Last Modified : 23 Jun, 2018 09:49 am
north-south-korea-to-hold-reunions-for-families-long-separated-by-war

கொரியப் போரில் பிரிந்த குடும்பங்களை முதற்கட்டமாக இணைக்கும் நடவடிக்கை வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்குவதாக தென்கொரியா அறிவித்துள்ளது. 

1950-53ம் ஆண்டுகளில் கொரியப் போர் நடந்தது. அப்போது வட கொரியா-தென் கொரியாவில் குடும்பங்கைளை பிரிந்தவர்கள் அதன் பின் இரு நாடுகளுக்கிடையே நிலவிய மோதல் போக்கால் சந்திப்பதற்கான வாய்ப்பையே இழந்தனர்.

தற்போது இரு நாடுகளுக்கு இடையே சுமுக உறவு ஏற்பட்டுள்ளதை அடுத்து முதற்கட்டமாக இரு நாடுகளைச் சேர்ந்த 100 பேர் தற்காலிகமாக தங்களது குடும்பங்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென் கொரியா அறிவித்திருக்கிறது. 

அதன்படி, ஆகஸ்ட் 20 முதல் 26ம் தேதி வரை வடகொரியாவில் உள்ள டைமண்ட் மவுன்டென் ரிசார்டில் உணர்வுப் பூர்வமான சந்திப்பு நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் மரணத்துக்குள் பிரிந்த உறவுகளைச் சந்தித்து விட வேண்டும் என ஏங்கும் முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிந்த குடும்பங்களில் கொரிய அதிபர்களின் உறவுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close