நைஜீரியாவில் கடும் வன்முறை: 86 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 02:39 pm
nigeria-86-killed-in-fresh-herder-farmer-violence

நைஜீரியாவில் நடந்த இன மோதல் பயங்கர வன்முறை உருவெடுத்து ஒருவொருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் 86 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின்லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 86 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். 50-க்கு மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன. கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் கால்நடை  வளர்ப்பவர்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு முற்றி வன்முறையானதாக கூறப்படுகிறது. 

நைஜீரியாவில் நிலப் பிரச்னை தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் மோதல்கள் நடப்பது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டில் இதுபோன்று நடந்த வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close