வட கொரிய அணுஆயுத சோதனை மையத்தில் ரகசிய உற்பத்தி?

  Padmapriya   | Last Modified : 28 Jun, 2018 05:32 am
satellite-images-show-north-korea-making-rapid-upgrades-to-nuclear-facility

வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தென்கொரியாவை சேர்ந்த இணையச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் சமீபத்தில் அமெரிக்கா - வடகொரியா இடையில் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் பாராட்டு தெரிவித்தன. 

வடகொரியா இந்த ஒப்பந்தத்தை ஒழுங்காக நிறைவேற்றினால் அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என அமேரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இதனிடையே, அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் வடகொரியா ரகசியமாக அணு ஆயுத உற்பத்தி மையத்தில் செயல்பட்டு வருவதாகவும் அங்கு உற்பத்தி தொடர்வதாகவும் தென்கொரிய இணைய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

வடகொரியாவின் யாங்பியான் பகுதியில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தற்போது குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாட்டின் தலைமையிடம் இருந்து திட்டவட்டமான உத்தரவு வரும்வரை அங்குள்ள அதிகாரிகள் வழக்கமான பணிகளில் தான் ஈடுபட்டு வரக்கூடும் எனவும் அந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close