சிரியாவில் தொடரும் தாக்குதல்: 5 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 29 Jun, 2018 05:46 pm

syria-war-air-strike-on-deraa-shelter-kills-17-civilians

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பகுதிகளை குறித்து வைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படைகளுக்கும் இடையே தொடர் தாக்குதல் நடைபெற்று வளர்கிறது. கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள பகுதிகளை மீட்கும் பொருட்டு, அரசுப்படையினர் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று, அரசுப்படையினர் கிளர்ச்சியாளர்கள் உள்ள பகுதியில் வான்வழித் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close