நைஜீரியா டேங்கர் லாரி விபத்தில் 50 வாகனங்கள் சேதம் 9 பேர் பலி!

  சுஜாதா   | Last Modified : 30 Jun, 2018 07:58 am
nigerian-oil-tanker-fire-kills-nine

நைஜீரியாவில் பெட்ரோல் ஏற்றிவந்த டேங்கர் தீடீர் விபத்துக்குள்ளானதில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகின மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

 
நைஜீரியா லாகோஸ் நகர் வழியாக பெட்ரோல் ஏற்றி வந்த லாரி சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த லாரியில் இருந்த எண்ணெய் வெளியே கசிந்தது. இந்த கசிவை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த வாகனங்களுக்கு வேகமாக தீ பரவியது. இதில்  5 பேருந்துகள் உட்பட 50 வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின. இந்த விபத்தில் 9 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த விபத்தினை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close