காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: சிறுவன் உள்பட 2 பாலஸ்தீனியர்கள் பலி

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2018 03:08 pm
israeli-forces-kills-two-palestinians-in-gaza-border

காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 13வயது சிறுவன் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஜோர்டான் வசமிருந்த ஜெருசலேம் நகரை 1980ல் இஸ்ரேல் கைப்பற்றி தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. ஜெருசலேமில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் இந்த மூன்று மதத்தினருமே இந்த பகுதியை தங்களுக்கே உரிமையாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தான் காஸா என்ற பகுதி உள்ளது. இந்தப்பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக  போராட்டம் நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் இஸ்ரேல் தங்களிடம் உள்ள ஜெருசலேமை தக்க வைத்துக்கொள்ள இப்பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீன மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வெடித்துள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வரும் மக்கள் இஸ்ரேலுக்கு எதிராக போராடி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று காஸா எல்லையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர். போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒரு 13 வயது நிறுவன் உள்பட இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 400க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close