சவுதியில் பெண்கள் ஆடையணிவதில் இருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு

  Newstm Desk   | Last Modified : 30 Jun, 2018 01:30 pm
dress-code-restriction-for-women-reduced-under-salman-rule-in-saudi

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு இருந்த கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆடைகளுக்கான கட்டுப்பாடும் சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டவிதிகள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதற்கிடையே, நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓட்ட விதித்திருந்த தடையை  சவுதி அரசு நீக்கியது. அதைத்தொடர்ந்து இன்று முதல் வெளியில் வரும் பெண்களுக்கான ஆடைகளில் இருந்த கட்டுப்பாட்டையும் அந்த அரசு தளர்த்தி உள்ளது. 

அதன்படி உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் இருக்கும் நாகரிக ஆடைகள் அணிந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தற்போது சவுதி அரேபியாவில் பெண்களுக்கான உடலை முழுவதும் மறைக்கும் வகையிலான நாகரிக ஆடைகளின் விற்பனையகங்கள், கண்காட்சிகளும் கடந்த சில நாட்களில் மட்டும் அதிக அளவில் காணப்படுகின்றன.  

இந்த ஆண்டு ரியாத்தில் நடந்த தேசிய தின கொண்டாட்டத்தின் போது, நடந்த விளையாட்டு போட்டியை பார்க்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இது போன்ற சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் தொடர் சீர்த்திருத்த நடவடிக்கைகளை அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சவுதியில் பாவ திட்டங்கள் அரங்கேறுவதாக அவர்கள் ஏற்கெனவே மிரட்டல் விடுத்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close