வீக்லி நியூஸுலகம்: பூண்டுக்கு தடை போட்ட பிரிட்டன் குடும்பம் முதல் ஜப்பானியரின் டைம்சென்ஸ் வரை...

  Padmapriya   | Last Modified : 30 Jun, 2018 07:23 pm

interesting-world-news-happenings-around-the-world

மருந்து விற்பனையில் இறங்கும் அமே சான் !

அமேசான் நிறுவனம் மருத்துவத் துறையில் கா ல்பதிக்க  முடிவு செய்துள்ளது. அதன்படி 'பில்பேக்' எனப்படும் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனத்துடன் அந்த நிறுவனம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான்.காம் என்பது அமெரிக்க பன்நாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இதன் தலைமையகம் வாஷிங்டன் நக  ரில் உள்ள சியாட்டல் பகுதியில் அமைந்துள்ளது. இது அமெரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய இணைய அங்காடியாகும். இதன் இணைய விற்பனை ஸ்டெப்பிள்சு நிருவனத்தினை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

மேகன் மார்க்லே பூண்டு சாப்பிட பிரிட்டிஷ் அ ரசு குடும்பம் தடை 

இங்கிலாந்தின் இளைய ராணி தன்னுடைய உணவில் பூண்டை சேர்த்துக்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனை தலைமை சமையலர் டேரன் மெக்கிராடி இது தொடர்பாக கூறுகையில், நாங்கள் எந்தவொரு உணவையும் பூண்டு சேர்த்தோ அல்லது அதிக வெங்காயங்களை கொண்டே சமைப்பதில்லை. எங்கள் ராணி தனது உணவு பட்டியலில் ஒருபோதும் பூண்டை சேர்த்தது இல்லை. 

ராணிக்கு அது பிடிக்கவில்லை என்பதற்காக இளைய ராணியும், அதையே பின்பற்ற வேண்டும் என்று அர்த்தமில்லை. பூண்டை தவிர்ப்பதால், கெட்ட நாற்றம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம் என்றார்.  ஆனால் அவருக்கு பூண்டு சாப்பிட தடை உள்ளது உண்மை என சில ஊடகங்கள் எழுதி வருகின்றன. 

இதனிடையே சமீபத்தில் மார்க்லே தனது பிடித்தமான உணவு குறித்து தெரிவித்துள்ளார். அது ஃபிலிப்பினோ-ஸ்டைல் சிக்கன் அடோபோ என்பதாகும். இதை செய்ய அதிகளவு பூண்டு, சோயா, வினிகர், சிறிது எலுமிச்சை கலந்த சாற்றில் சிக்கனை நன்கு ஊற வைக்க வேண்டும். இளைய ராணிக்கு அரண்மனையில் மட்டும்தான் கட்டுப்பாடும். வெளிநாடுகளுக்கு செல்லும்போது பூண்டு உள்பட விருப்பப்பட்டதை சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.

17 வயது பெண்ணை திருமணம் செய்த 112 வயது தாத் தா

உலகின் வித்தியாசமான தம்பதியர் பட்டியலில் சோமாலியாவை சேர்ந்த அகமது முகமது டோரா என்ற 112 வயது தாத்தா, 17 வயது சஃபியா அப்துல்லா என்ற பெண்னின் திருமணம் இணைந்துள்ளது.

உலகின் வித்தியாசமான தம்பதியரில் உயரமான, குள்ளமான, வயதான - இளமையான என பார்த்த உடன் இப்படியும் தம்பதிகளா என நினைக்கும் அளவுக்கு உள்ள பல தம்பதியர் இருக்கின்றனர்.  அந்த வகையில் சோமாலியாவை சேர்ந்த அகமது முகமது டோரே என்ற 112 வயதான தாத்தா, 17 வயதான சஃபியா அப்துல்லா என்ற இளம் பெண்ணை திருமணம் செய்தார்.

இதில் என்ன ஒரு அதிர்ச்சி தகவல் எனில் அவருக்கு ஏற்கனவே 5 மனைவிகள் இருந்தனர். அவர்கள் மூலம் 13 குழந்தைகளுக்கு தகப்பனாகியுள்ளார். அவரின் 3 மனைவிகள் இறந்துவிட்டனர். இந்த சூழலில் 6வதாக 17வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். 

3 நிமிடங்கள் முன்னே சென்றதால் சர்ச்சை   அதிர் ச்சி!

ஜப்பான் நீர்பணித்துறையில் பணியாற்றும் 64 வயது நபர் , மதிய உணவு இடைவேளைக்காக 3 நிமிடங்கள் முன்னதாக சென்றுள்ளார். பொதுவாக அந்நிறுவனத்தின் உணவு இடைவேளை மதியம் 12 மணி முதல் 1 மணி வரையாகும். 

இவர் 3 நிமிடங்கள் முன்னதாக சென்றதை அந்நிறுவன அதிகாரி பார்த்து உள்ளார். இதையடுத்து அவருக்கு அரை நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 7 மாதங்களில் மட்டும் இப்படி 26 முறை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் அந்த ஊழியர் தினமும் தாமதமாகவும் வேலைக்கு வந்திருக்கிறார். அதற்காகவும் சம்பளம் பிடிக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் ஊடகங்களுக்கு பெருமையாக தெரிவித்துள்ளனர். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பேட்டி அளித்த அதிகாரிகளுக்கு பிரச்னை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

சில மாதங்கள் முன்பு, உள்ளூர் ரயில் ஒன்று 25 விநாடிகள் முன் கூட்டியே புறப்பட்டுவிட்டதால், பொதுமக்களிடம் ஜப்பான் ரயில்த்துறை மன்னிப்புக் கேட்கப்பட்டது நினைவிருக்கலாம். 

முன்னாள் ஆட்சியாளர் சுவிஸ் வங்கி கருப்பு பணத்தை மக்களுக்கு அளிக்கும்  அரசு!

நைஜீரியாவின் முன்னாள் ராணுவ ஆட்சியாளரான சானி அபாஷா கொள்ளையடித்த பணத்தை ஏழைக் குடும்பங்களுக்கு பிரித்து அளிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 300 மில்லியன் டாலரை சுவிஸ் அதிகாரிகள்   திருப்பி அளித்த பிறகு அடுத்த மாதம், இதனை மக்களுக்கு பிரித்து அளிக்கும் பணி தொடங்க உள்ளது.

1990களில் அபாஷாவால் கொள்ளையடிக்கப்பட்ட இந்தப் பணம், 3 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பமும் மாதத்திற்கு 14 டாலர் பெறும்.நைஜீரியாவின் 36 மாநிலங்களில், 19 மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இப்பணம் வழங்கப்பட உள்ளது. அபாஷா 1993 முதல் 1998 வரை ஆட்சியில் இருந்தபோது, கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களில் ஒரு பகுதி, முதலில் லக்சம்பர்க் நாட்டில் சேமிக்கப்பட்டது.  மாரடைப்பினால் ஜூன் 8-ம் தேதி 1998-ல் இறக்கும் முன்பு வரை நைஜீரியாவை இரும்புக்கரம் கொண்டு அவர் ஆண்டு வந்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீட்க உள்ளதாக 2015 தேர்தல் பிரசாரத்தின் போது அதிபர் முஹமது புஹாரி அறிவித்தார். தற்போது மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார். உலக வங்கியின் மேற்பார்வையில், ஜூலை மாதம் முதல் சிறு சிறு தொகையாக தவணை முறையில் பணம் வழங்கப்பட உள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.