மாபெரும் வெற்றியோடு மெக்சிகோ அதிபரானார் இடதுசாரி வேட்பாளர் ஓப்ரடோர்!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2018 10:33 am
obrador-becomes-new-mexican-president-by-landslide-victory

மெக்சிகோ நாட்டின் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இடதுசாரி வேட்பாளர் மானுவேல் லோபெஸ் ஓப்ரடோர் மாபெரும் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

நாடு முழுவதும் அதிகரித்து வரும் வறுமை, ஊழல், அரசின் மீது பொதுமக்களுக்கு இருந்த கடும் கோபத்துக்கு இடையே, ஓப்ரடோருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. நடுநிலையான கொள்கைகளை கடைபிடித்து வந்த முந்தைய அரசுகளால் மெக்சிகோ நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை கண்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இரண்டாவது பெரிய பொருளாதாரமான மெக்சிகோவை தனது மக்கள் நல கொள்கைகள் மூலம் மீட்க வாக்குறுதிகள் அளித்தார் ஓப்ரடோர். 

அரசில் உள்ள ஊழல்வாதிகளை விரட்டி, பொதுமக்களுக்கு உதவும் பல நலத்திட்டங்களை கொண்டு வரவும் உறுதியளித்தார். இதனால், இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அவருக்கு பெரும் ஆதரவு கிளம்பியது. நேற்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு பின்னர் வெளியான எக்சிட் போல் கருத்துக்கணிப்புகளில், ஓப்ரடோர் மாபெரும் வெற்றி பெறுவார் என தெரிய வந்தது. 

அதன்பின், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்ததில், ஆரம்பம் முதலே அவர் கணிசமான முன்னிலை பெற்றார். சிறிது நேரத்திலேயே, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள ரிக்கார்டோ அனயா மற்றும் ஜோஸே ஆண்டோனியோ மெயேட் ஆகியோர் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு, ஓப்ரடோருக்கு வாழ்த்துக்கள் கூறி அறிக்கை வெளியிட்டனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், புதிய மெக்சிகோ அதிபர் ஓப்ரடோருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close