பிலிப்பைன்சில் மேயர் சுட்டுக் கொலை... போதை தொழில் முன்விரோதம்?

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 04:20 pm

philippines-mayor-antonio-halili-shot-dead-by-sniper

பிலிப்பைன்சில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேயரை மர்ம நபர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிலிப்பைன்சின் தலைநகர் மணிலாவின் தெற்கில் உள்ள டினாவுவான் நகர மேயர் ஆன்டினோ ஹாலாலி. இவர் நேற்று குற்றவாளிகள் பங்கேற்ற அடையாள அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

அப்போது தேசிய கொடியை ஏற்றி வைத்த மேயர், அதற்கு மரியாதை செலுத்திய பின் அங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அந்த நேரத்தில் எதிரே பார்வையாளர்கள் வரிசையில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மேயரை நோக்கி துப்பாக்கிக்சூடு நடத்தினார். அதில் மேயரின் மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகொலை சம்பவத்தின் மொபைல் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேயர் ஆன்டினோ, போதை மருந்து கடத்தல் கும்பலை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர், போதை பொருள் கடத்தல் தொடர்பாக மேயரின் உத்தரவில் சில கும்பல் கைது செய்யப்பட்டனர். முன்னதாக மேயர் ஆன்டினோ ஹாலாலிக்கும் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதனால் முன்விரோதம் தொழிற்போட்டியின் காரணமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close