கால் இல்லா சிறுமிக்கு தந்தை ஏற்படுத்தி தந்த செயற்கை கால்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Jul, 2018 09:31 am
8-year-old-syrian-girl-born-with-no-legs-finds-a-ray-of-hope-in-turkey

சிரியா நாட்டில் பிறவியிலேயே கால்கள் இன்றி பிறந்த சிறுமியை அவரது தந்தை நடக்க வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவின் அலெப்போ பகுதியை சேர்ந்தவர் முகமது மெர்கி. இவரது மகள் மாயா மெர்கிக்கு பிறவியிலேயே முழங்காலுக்கு கீழ் பகுதி இல்லை. இதனால் நடக்க முடியாமல் இவர் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். தற்போது இவருக்கு 8 வயதாகும் நிலையில் போர் காரணமாக மெர்கியின் குடும்பம் துருக்கியில் தஞ்சமடைந்துள்ளது. 

இந்நிலையில் மகளை நடக்க வைக்க வேண்டும் என தீர்மானித்த தந்தை, கேன்களைப் பயன்படுத்தி செயற்கையாகக் கால் ஒன்றைத் தயாரித்து தனது மகளுக்கு பொருத்தி அவரை நடக்கச் செய்தார். மெர்கியின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், துருக்கியை சேர்ந்த ரெட் கிரசண்ட் என்ற தன்னார்வ அமைப்பு அவருக்கு உதவ முன்வந்தது. இதன்படி மாயா மெர்கிக்கு செயற்கை கால் பொருத்த முன் வந்துள்ள மருத்துவர் மெக்மெட் ஷெகி, பிறவியிலேயே கால் இன்றி பிறந்ததால் அவளுக்கு முழுமையாக கால் வழங்க முடியாது. ஆனால் ஆபரேசன் மூலம் விரைவில் அவர் செயற்கை கால்களுடன் உலகை வலம் வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close