அந்தமானில் இரண்டு முறை நிலநடுக்கம்...பீதியில் மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 04 Jul, 2018 03:15 pm

earthquake-of-magnitude-5-2-strikes-andaman-islands-second-quake-in-a-day

அந்தமானில் இன்று இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. 

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் என்பது அடிக்கடி நிகழ்வதுண்டு. இந்நிலையில், இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. காலை 5.42 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.5 என பதிவாகியுள்ளது. இதையடுத்து பிற்பகல் 12.50 மணியளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.2 புள்ளிகள் என பதிவாகியுள்ளது.  அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close