சவுதியில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு; காரை எரித்து அட்டகாசம் செய்த ஆண்கள்

  Padmapriya   | Last Modified : 05 Jul, 2018 07:10 pm

saudi-woman-s-car-torched-in-suspected-hate-crime

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண் ஒருவரின் கார் எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. நீண்ட காலமாக இஸ்லாமிய கடைபிடிக்கப்பட்ட இஸ்லாமிய சட்ட விதியை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த மாதம் 24ம் தேதி ரத்து செய்தார். இதற்கு அங்கு பலத தரப்பும் ஆதரவு அளித்தது. இதுவரையிலும் சுமார் 120,000 பெண்கள் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் மெக்காவுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் நள்ளிரவில் எரிக்கப்பட்டுள்ளது. அந்த கார் 31 வயதான சல்மா அல் ஷரிப் என்ற பெண்ணினுடையது எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து சல்மா கூறும்போது, "நான் இங்கு பணியாற்றி சம்பாதிக்கும் தொகை பெரும்பாலான பணம் பயணச்செலவுகளுக்காக மட்டுமே வீணாகிறது. கார்  ஓட்ட இருந்தத் தடை நீக்கத்தால் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். ஆனால் காரை ஓட்டிச் சென்ற போதே, அக்கம்பக்கத்து ஆண்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் " என்றார். 

பெண்கள் கார் ஓட்ட வழங்கப்பட்ட அனுமதியை அங்கும் பலரும் எதிர்த்துள்ளனர். எனினும் குடும்ப செலவுகளுக்காக சொந்தமாக கார் ஓட்டி வேலைக்கு சென்று வந்துள்ளார் சல்மா. இந்நிலையில் நேற்று இவரது காரை தீவைத்து சிலர் எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் விவாதத்துக்குள்ளானது. இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.