கனடாவில் வெயிலுக்கு 54 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 07 Jul, 2018 04:58 pm
death-toll-rises-to-54-as-quebec-heat-wave-ends

கனடாவில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலின் வெப்பத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. 

கனடாவில் கடும் வெப்ப சூழல் டித்து வருகிறது. கனடாவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தினார் காட்டுத் தீயும் கட்டுக்கடங்காமல் உள்ளது.  

மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் வெயிலால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெயிலுக்கு இதுவரை பலர் பலியான நிலையில், வெயிலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளதாக அதன் அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மாண்ட்ரியலில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.  

பலியானவர்கள் அனைவரும் குளிர்சாதன பெட்டி அமைத்திட முடியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தனியார் நிருவனங்கள் நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏழைகளுக்கு உதவ பல்வேறு நிறுவனங்களும் முன்வந்துள்ளன.  ஆங்காங்கே செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.  இன்னும் சில தினங்களில் வெயிலின் தாக்கம் இயல்பு நிலை திரும்பி விடும் என கனட நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close