• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 100யைத் தாண்டியது!

  Newstm Desk   | Last Modified : 09 Jul, 2018 11:09 am

japan-floods-at-least-100-dead-in-record-rainfall

தென்கிழக்கு ஜப்பானில் பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100யைத் தாண்டியுள்ளது. 

ஜப்பான் நாட்டில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பலியனோர் எண்ணிக்கை தற்போது 100யைத் தாண்டியுள்ளது. மேலும், வெள்ளத்தில் சிக்கிய 80 பேரின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை. சுமார் 800 வீடுகள் வரை நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை ஜப்பான் வரலாற்றில் இப்படியொரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில்லை. ஹிரோஷிமா மாகாணத்தில் தான் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து அப்பகுதி முழுவதும் முற்றிலும் முடங்கியுள்ளது. 

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மீட்பு பணியை பொறுத்தவரை 40க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. காவல்துறையினர், மீட்புப் படையினர், தீயணைப்பு துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் என 48,000 பேர் வரையில் தொடர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  "ஜப்பானில் கடந்த மூன்று நாட்களாக சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. தொடர்ந்து சில நாட்களுக்கு மழை நீடிக்கும்" என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close