தாய்லாந்து குகையில் சிக்கிய 12 சிறுவர்களும் மீட்பு...வாழ்த்து மழையில் மீட்புப்படையினர்!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 09:30 am

all-boys-and-coach-have-been-rescued-from-thailand-cave

தாய்லாந்து குகையில் சிக்கிய அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளரும் மீட்கப்பட்டுள்ளார். 

தாய்லாந்து நாட்டில் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற 10 கி.மீ நீளமுடைய குகைக்கு கால்பந்து விளையாட்டு அணி ஒன்று பார்வையிட சென்றுள்ளது. கால்பந்து பயிற்சியாளர் மற்றும் 11 முதல் 16 வயதுடைய 12 சிறுவர்கள் உள்ளே சென்றனர். இஅந்த சமயத்தில் மழை அங்கு தீவிரமடைந்ததால் யாரும் குகையைவிட்டு வெளியே வரமுடியவில்லை.  குகையை விட்டு வெளியே செல்லும் பகுதி முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது.

பின்னர் இவர்களை காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டு, கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுற்றியுள்ள பல்வேறு நாடுகளும் சிறுவர்களை தேடும் பணிக்கு உதவின. அவர்களின் சைக்கிள் மற்றும் பொருட்கள், குகைக்கு வெளியே இருந்ததை பார்த்து, சிறுவர்கள் அங்கே சிக்கிக்கொண்டிருப்பது தெரிய வந்தது. 

ஒரு வாரத்திற்கு மேலாகியும், இவர்களை கண்டுபிடிக்க முடியாமல் இருந்த நிலையில், உள்ளே சென்ற நீச்சல் வீரர் ஒருவர் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தார். உணவு இல்லாமல் சோர்வடைந்த நிலையில் இருந்த அவர்களுக்கு தொடர்ந்து உணவு, மருந்துகள் முதலியவை வழங்கப்பட்டன. அப்பகுதியில் நீர் குறைந்தால் தான் அவர்கள் வெளியே வர முடியும் அல்லது அவர்கள் நீந்தி தான் வர வேண்டும் என மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் நலமுடன் உள்ளதாகவும் தாய்லாந்து ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களின் கடுமையான முயற்சியால் ஜூலை 8ம் தேதி 4 சிறுவர்களும், நேற்று 4 சிறுவர்களும் மீட்கப்பட்டிருந்தனர். எஞ்சிய 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இதையடுத்து வெற்றிகரமாக இந்த 5 பெரும் இன்று மீட்கப்பட்டுள்ளனர். குகையில் உள்ளே இருப்பவர்களை மீட்க ஒரு மாத காலம் வரை கூட  ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், 3 நாட்களில் அனைவரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்களுக்கு உலக அளவில் பல்வேறு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close