தாய்லாந்து: மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் உற்சாக போஸ்- வைரல் வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 09:53 am

rescued-thai-boys-are-in-hospital-video

தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் இருந்தவாறு அவர்கள் உற்சாக போஸ் கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தாய்லாந்து நாட்டில் சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகையில் பயிற்சியாளர், 12 சிறுவர்கள் அடங்கிய கால்பந்து குழு ஒன்று மழை வெள்ளத்தில் குகையின் உள்ளே சிக்கியது. அவர்கள் காணாமல் போன 9 நாட்களுக்கு பிறகு தான் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்தது. அவர்களை மீட்க ஒரு மாத காலம் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், 3 நாட்களில் பயிற்சியாளர் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.  இவர்களுக்கு உலக அளவில் இருந்து பல்வேறு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மீட்கப்பட்ட சிறுவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 7 அடி தொலைவுக்கு அப்பால் இருந்து பெற்றோர்கள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். சிறுவர்களின் உடல்நிலையை பொறுத்தவரை, "அவர்கள் சராசரியாக 2 கிலோ உடல் எடை குறைந்துள்ளனர். ஆனால் நல்ல உடல் வலிமையுடன் உள்ளனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். பின்னர் ஒரு மாத காலமாவது அவர்கள் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். அவர்களின் உடல்நலனுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மருத்துவமனையில் சிறுவர்கள் உற்சாகத்துடன் போஸ் கொடுக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close