வீக்லி நியூஸுலகம்: 'இன்ஸ்டாகிராமை பற்றி எரிய வைத்த ஜஸ்டின் பீபர்' மற்றும் 'மண்ணுக்குள் மிளிரும் காதல்!'

  Padmapriya   | Last Modified : 15 Jul, 2018 07:11 am

interesting-world-news-happenings-around-the-world

மண்ணுக்குள்ளும் காதல்! 

உக்ரைனில் தோண்டப்பட்ட ஒரு கல்லறையில், ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்த எலும்புக்கூடுகள் கண்டுபடிக்கப்பட்டன. அதனை ஆராய்ந்ததில், "அவர்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தம்பதியாக இருக்கவேண்டும். Vysotskaya, Wysocko என்ற நாகரிகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் என யூகிக்கப்பட்டுள்ளது.

இந்த எலும்புக்கூடுகள் இருந்த கோலத்தைப் பார்க்கும்போது, 'சதி' முறை போல, கணவன் இறந்த பிறகு இருவரையும் சேர்த்துப் புதைத்திருக்க வாய்ப்பில்லை. இறந்த கணவனை விட்டுப் பிரிய மனம் இல்லாததாலும் அடுத்த பிறவியில் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணத்திலும் இந்தப் பெண் கணவனுடன் சேர்ந்து உயிர் துறக்க முடிவு செய்திருக்க வேண்டும். வலி இல்லாமல் உயிர் போகக்கூடிய விஷத்தை அருந்தி, கணவன் உடலுக்கு அருகில் படுத்து, அவர் தலைக்கு அடியில் வலது கையை வைத்து, முகத்தைத் தன் முகத்தோடு உரசிக்கொண்டு, கால்களைக் கணவன் மீது போட்டு, இடது கையை அவரது மார்பு மீது வைத்தபடி உயிர் துறந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

எலும்புகள் இருக்கும் நெருக்கத்தைப் பார்கும்போது அவை கட்டாயத்தால் வந்ததில்லை என்று தெளிவாக உள்ளதாகவும் பெண்ணே விரும்பி இவ்வாறு செய்திருக்கிறார் என்றும் ஆய்வாளர்கள் உறுதிபட கூறுகின்றனர். 

மண்ணுக்குள் சென்ற பின்னும் இந்த பெண்ணின் காதல் மடியாமல் இருப்பதாக உக்ரைன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் உருக்கத்தோடு இதனை வெளிப்படுத்துகின்றனர். 

18 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் கார்பஸ் பூ

18 வருடத்துக்கு ஒருமுறை பூக்கும் கார்பஸ் பூ அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள கோல்டன் கேட் பூங்காவில் ஜுலை 12ஆம் தேதி பூத்தது. இந்த பூ பூக்கும்போது கடுமையாக துர்நாற்றம் வீசும் குணம் கொண்டது. இதனால் இந்தப் பூவை பார்க்க வந்தவர்கள் எல்லோரும் மூக்கை மூடியவாறே இருந்தனர். சிலர் நாற்றம் தாங்காமல் ஓடினர். 

18 வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் பூவை பார்க்க தினமும் நூற்றுக்கனக்கானோர் மிச்சிகன் வருகின்றனர். நாற்றம் தான் வந்தவர்களை அப்படியே ஓட வைக்கிறது.  இந்தப் பூ பூப்பதைப் பார்க்க இணையதளத்தில் நிகழ் நேரலை வசதியும் செய்யப்பட்டது. 

தீராத வழக்குகளில் சிக்கி இருக்கும் ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன் நிறுவன பொருட்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு அந்த நிறுவனம் 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

முதலில் 550 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட அமெரிக்காவின் மிசெளரி மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி, தண்டிக்கும்படியான சேதங்களை ஏற்படுத்தியதற்காக கூறி பின் கூடுதலாக $ 4.1 பில்லியன் அபராதம் விதித்தார்.

இந்த பிரபலமான நிறுவனம் தனது குழந்தைகள் பவுடருக்கு எதிராகத் இதுவரை தொடரப்பட்ட சுமார் 9,000 வழக்குகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்ப்பு ஆழ்ந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் மேல்முறையீடு செய்யப்போவதாக ஜான்சன் & ஜான்சன் கூறியுள்ளது. 

இன்ஸ்டாகிராமை பற்றி எரிய வைத்த ஜஸ்டின் பீபரின் அந்தரங்க படம்!

   பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் அவரது காதலியான அமெரிக்க மாடல் அழகி ஹெய்லி பால்ட்வின்னுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்த செய்தியே பலராலும் தாங்க முடியாத நிலையில், அவர் வெளியிட்டுள்ள மிக அந்தரங்கமான படம் இன்ஸ்டாகிராமையே பற்றி எரிய வைத்துள்ளது. 

கனடாவை சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், தனது இளம் வயதிலேயே இசைத்துறையில் புகழின் உச்சியை அடைந்தவர். இவரும் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி ஹெய்லியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் இடையே தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த வாரம் தகவல் வெளியானது. 

ரசிகைகள் பட்டாளாம் நிறைந்த ஜஸ்டின் பீபருக்கு காதலியாக போட்டப் போட்டி எனப் பல கிசுகிசுக்கள் கசிவது வழக்கம். அவ்வளவு தீவிர ரசிகைகளைக் கொண்ட பீபர், அவர்களை மேலும் விரக்தியடைய செய்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவுகள் அதிகம் உள்ளன. என்னவென்று பார்த்தால், அவர் தனது காதலி ஹெய்லியுடன் ஜஸ்டின் பீபருடன் பாத் டப்பில் இருக்கும்படி மிக நெருக்கமான முத்தக் காட்சிப் படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்தப் படம் தான் எரிச்சலுக்கு காரணம். 

அமெரிக்காவில் பறக்கும் காரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அமெரிக்காவில் பறக்கும் காரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் தயாரிக்கப்பட்டு, பிளாக் ஃபிளை என்று பெயரிடப்பட்ட அந்தக் கார் 62 மைல் வேகத்தில் தொடர்ச்சியாக 25 மைல் தூரம் பறந்து சாதனை செய்துள்ளது.

மின்சாரம் மூலம் இயக்கப்படும் இத்தகைய பறக்கும் காரின் மின்கலன் வெறும் 25 நிமிடங்களில் சார்ஜ் ஏற்றிக் கொள்ளும் திறன் கொண்டது. பிளாக் ஃபிளையின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டபின், அடுத்த ஆண்டு முதல் இந்தக் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கார் தயாரிப்பு நிறுவன தலைமைச் செயல் அதிகாரி மார்க்கஸ் லங்  தெரிவித்துள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.