ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: அலிபாபா நிறுவனரை பின்னுக்குத்தள்ளி முகேஷ் அம்பானி முதலிடம்!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2018 05:32 pm
billionaire-ambani-topples-jack-ma-as-asia-s-richest-person

ஆசிய பணக்காரர்களில் அலிபாபா நிறுவனரை பின்னுக்குத்தள்ளி முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். 

ஆசியாவில் பணக்காரர்களின் பட்டியலை சமீபத்தில் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். முன்னதாக முதல் இடத்தில் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக் மா இருந்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்பு 1.6% உயர்ந்து சுமார் 3 லட்சம் கோடி(44.3 டிரில்லியன் டாலர்)யாக அதிகரித்துள்ளது. 

அலிபாபா நிறுவனர் ஜாக் மாவின் சொத்து மதிப்பு ரூ.2.99 லட்சம் கோடி (44 பில்லியன் டாலர்) என பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜியோ சேவை மற்றும் பெட்ரோலிய சேமிப்பு திறன் அதிகரிப்பினால் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.27,200 கோடி அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close