வீக்லி நியூஸுலகம்: காதலி மூளையை வறுத்து திண்றவரும் காதலன்!

  Padmapriya   | Last Modified : 21 Jul, 2018 03:42 pm

interesting-world-news-happenings-around-the-world

அந்தரத்தில் உயிர் போகும் சூழலில் ஒரு வீடியோ!

தென்னாப்பிரிக்காவின் ஒண்டர்பூம் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டுச் சென்ற சிறிய ரக உள்நாட்டு விமானம் விபத்தில் சிக்கியது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் பிரச்னை ஏற்பட்டதால் விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீப்பிடித்து எரிந்தது. அதைப் பார்த்ததும் பயணிகள் அச்சமடைந்து அலறினார்கள். இருந்தும் விஞ்ஞானிகள் சாதுரியமாக விமானத்தை கீழ் நோக்கி திருப்பி தரை இறக்கினார்கள். 

எனினும் அந்த விமானம் பால் பண்ணை வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த 19 பேர் காயமடைந்தனர். இருப்பினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.  ஆனால் இத்தனை பதட்டத்துக்கு இடையே பயணி ஒருவர் விமானம் தீப்பிடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். திடுக்கிடும் தருணத்தில் அவர் எடுத்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

இடையே இந்த விபத்தில் விமானி மற்றும் தரையில் தொழிலாளர் என 2 பேர் பலியானதாகவும், 2 பைலட்டுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பூமியின் 100 மைல் ஆழத்தில் வைர மலை! 

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பூமி குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதில் பூமிக்கு அடியில் வைரங்கள் படிமங்களாக புதையுண்டு கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்த தகவல் ஜியோ ரசாயனம் ஜியோ இயற்பியல் ஆகிய அறிவியல் இதழ்களில் வெளியாகியுள்ளன. 

வைரப் படிமங்கள் மலைகள் மற்றும் குன்றுகள் போன்றும் உள்ளதாக பல லட்சம் டன் எடை மிக்க அளவில் அவை இருப்பதாகவும் ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் இவற்றை எந்த வகையிலும் துளையிட்டோ, வெட்டியோ எடுக்க முடியாது. ஏனெனில் அவை பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 150 மைல் ஆழத்தில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலி மூளையை வறுத்து திண்பதா? 

ரஷ்யாவில் டிமிரிட்டி லிசின் (21). இவருக்கு சீரியல் கில்லர்கள் குறித்த கதைகளில் அதிக ஆர்வமாம். அடிக்கடி மனிதர்களைக் கொன்று தின்னும் சடங்குகள் குறித்து வாசிப்பது வழக்கம். அதன்படி, ஒரு கதையில் படித்தது போலவே தனது காதலியான ஒலாகா புடுனோவாவை (45) கொன்று தின்றுள்ளார்.

அவளது தலையில் ஒயின் பாட்டில் ஒன்றினால் 25 முறை அடித்துக் கொன்றுவிட்டு அவளது மூளையை எடுத்து ஒரு துண்டை வறுத்துத் தின்றிருக்கிறான். அதன் சுவை அவனுக்கு பிடித்துப் போகவே மீதமுள்ள மூளையையும் வறுத்துத் தின்றிருக்கிறான். சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதாகக் கூறி புடுனோவாவின் வீட்டிற்கு சென்றுள்ள டிமிரிட்டி அவளைக் கொன்று தின்றுள்ளான். ரிவிசாரணையை அடுத்து கைது செய்யப்பட்ட டிமிரிட்டிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மூடு விழா காணாத கேசட் கம்பெனி!

சி.டி.யின் வரவால் உலகம் முழுவதும் ஆடியோ கேசட்களின் ஆதிக்கம் குறைந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது. பல தயாரிப்பு நிறுவனங்கள் சொல்லமல் கொள்ளாமல் தங்களது கடையை மூடிவிட்ட நிலையில் அமெரிக்காவில் இருக்கும் நேஷனல் ஆடியோ கேசட் கம்பெனி மட்டும், ஆடியோ கேசட் தயாரிப்பை விடுவதாக இல்லை. விற்பனை குறைந்தாலும், தொடர்ந்து ஆடியோ கேசட்களை தயாரித்து வருகிறார்கள். போதுமான லாபமும் கிடைக்கிறதாம்.

நேஷனல் ஆடியோ கம்பெனி 1969-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சி.டி. அறிமுகமான பிறகு, மற்ற ஆடியோ கேசட் கம்பெனிகளும் சி.டி.களுக்கு மாறிவிட்டன. ஆனால் இந்த கம்பெனியை மூடக்கூடாது என்பதில் அதன் நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. அதனால் அமெரிக்காவின் கடைசி கேஸட் கம்பெனி என்ற பெருமையும் கிடைத்திருக்கிறது.

"இன்றும் கூட நிறைய இசையமைப்பாளர்கள் ஆடியோ கேசட்களை விரும்புகிறார்கள். சில சிறிய இசைக்குழுக்கள் தங்கள் இசையை ஆடியோ கேசட்களில் மட்டுமே வெளியிட விரும்புகின்றன. நாங்கள் தயாரிக்கும் கேசட்களில் 70 சதவிகிதம் இசைப்பதிவுக்கே பயன்படுத்தப்படுகின்றன. மீதியுள்ளவை எதுவும் பதிவு செய்யாத வெற்று கேசட்களாகவே விற்பனையாகின்றன. 

லாபத்துடன் ஓடினாலும் இந்த நிறுவனத்தை வெகு காலத்துக்குத் தொடர்ந்து நடத்த இயலாது. இருப்பினும் இதுதான் அமெரிக்காவின் கடைசி கேசட் கம்பெனி என்ற பெருமிதத்தில் இயங்கி வருகிறது" என்கிறார் அதன் உரிமையாளர். 

ப்ளே பாய் மாடலை சரி கட்டும் ட்ரம்ப்: கொஹென் வீட்டில் சிக்கியது ஆடியோ 

அமெரிக்க அதிபர் ட்ரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொண்டதை, ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பை கிளப்பியுள்ளன. 

இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க்கில் உள்ள கொஹென் வீட்டில் எஃப் பி ஐ சோதனை நடத்தப்பட்டது. அப்பொது இது தொடர்பான ஆடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிபர் ட்ரம்புடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறும் கரென் மெக் டொகலுக்கு பணம் அளித்து அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக, ட்ரம்ப் மற்றும் கொஹென் பேசிக் கொள்ளும் ஆடியோ அதில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.