காலாவதி கண் மையை பயன்படுத்தியதால் இளம் பெண்ணின் பார்வை பறிபோனது

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:40 am
australian-women-loses-her-vision-after-using-expired-aye-product

காலாவதியான கண் மையை பயன்படுத்தியதால் ஆஸ்திரேலிய பெண்ணுக்கு பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷெர்லி பாட்டார். இவர் அலுவலகம் புறப்படும்போது தான் பயன்படுத்தும் கண் மையை இமைகளுக்கு வழக்கம்போல் பூசிக் கொண்டுள்ளார்.  ஆனால் அவருக்கு அதன் முதலே கண் எரிச்சல் ஏற்பட தொடங்கியுள்ளது. இதன்  அவதி தொடர்ந்ததால் 2 நாட்கள் கழித்து அவர் மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். 

ஷெர்லி கண்ணை பரிசோதித்த மருத்துவர் கண்ணில் தொற்று ஏற்பட்டு பார்வை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். எனவே அதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு பலன் இல்லை. கண் பார்வை குறைந்து கொண்டே இருக்கிறது. சற்றும் பலனில்லாத நிலையில் அவரது கண் மையை பரிசோதித்ததில் அது காலாவதியானதாகவும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதும் தெரிய வந்தது. 

தற்போது கண் பார்வை சிறிதளவே உள்ள நிலையில், அவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வருகிறார். விரைவில் முழு பார்வையும் மறைந்து போகும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close