உகாண்டாவில் வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

  Padmapriya   | Last Modified : 25 Jul, 2018 09:50 pm

pm-modi-unveils-bust-of-sardar-vallabhbhai-patel-in-uganda

உகாண்டா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை அங்கு திறந்து வைத்தார். 

பிரதமர் நரேந்திர மோடி, 5 நாள் பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்குச திங்கட்கிழமை புறப்பட்டார். முதலில் ருவாண்டா சென்ற அவர் அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பின்னர் உகாண்டா சென்றடைந்தார். உகாண்டா நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்ற உள்ளார். 

1997ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் உகாண்டாவுக்கு அரசு முறை பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும். நேற்று மாலை அவர் உகாண்டாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் முசிவெனியுடன் கலந்துரையாடினார். பின்னர் தலைநகர் கம்பாலாவில், உகாண்டா வாழ் இந்தியர்கள் மத்தியில் சுமார் 30 நிமிடங்கள் பேசினார். 

இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், ''உகாண்டா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடியும் அதிபர் முஸ்வெனியும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பெரும் அளவிலான இந்தியர்கள் திரண்டிருந்தனர். 

இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் கலாச்சார மற்றும் பொருளாதார பிணைப்பை இங்கு வாழும் இந்தியர்கள்தான் ஏற்படுத்துகின்றனர். உகாண்டா அதிபரும், நாட்டில் வாழும் இந்தியர்களை புகழ்ந்து பேசினார். அவர்களின் கடுமையான உழைப்புக்காகவும் உகாண்டாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் வித்திடுவதாக அவர் இந்தியர்களை பாராட்டினார். 

உகாண்டா வாழ் இந்தியர்களை அரவணைத்துக் கொண்டதற்கு அதிபர் முஸ்வெனிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் பிரதமர் மோடி'' என்று அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.