ஆன்லைன் டேட்டிங்கில் பயங்கரம்... இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் படுகொலை!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 03:58 am

indian-student-killed-at-online-date-s-house

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்திய மாணவர் ஒருவர் ஆன்லைன் டேட்டிங் சைட் மூலமும் சந்தித்த பெண்ணின் வீட்டில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

25 வயதான இந்திய இளைஞர் மவுலின் ரத்தோட், ஆஸ்திரேலியாவில் அக்கவுன்டிங் பயின்று வருகிறார். சமீபத்தில், ஆன்லைன் டேட்டிங் சைட் மூலம், ஒரு பெண்ணுடன் அவர் பழகி வந்ததாக தெரிகிறது. 19 வயதேயான அந்த பெண்ணின் வீட்டிற்கு கடந்த திங்கள் இரவு மவுலின் சென்றிருக்கிறார். அதன் பின், அவசர சேவைக்கு தகவல் கிடைக்க, அவர்கள், பெண் வீட்டில் ரத்த வெள்ளத்தில் இருந்த ரத்தோடை மீட்டுள்ளனர். மெல்போர்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

வீட்டில் தனியே வசிக்கும் அந்த இளம்பெண் பின்னர் கைது செய்யப்பட்டார். ஏன் கொலை செய்தார் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்த ரத்தோட் குறித்து பேசிய அவரது நண்பர், 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்தோட் ஆஸ்திரேலியா வந்ததாகவும், அவர் 'மிகவும் தன்னடக்கம் கொண்டவர்', 'படிப்பில் ஆர்வம் செலுத்துபவர்' என்றும் கூறினார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.