இருளில் மூழ்கிய ஜப்பான்: இப்போது புயலால் வந்த பாதிப்பு!

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 04:47 pm
typhoon-jongdari-hits-japan

ஜப்பானின் மேற்கு பகுதிகள் ஜாங்டாரி என்ற புயல் காற்றினால் பாதிக்கபட்டுள்ளன. அந்தப் பகுதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. 

ஜப்பானில் சில வாரங்களுக்கு முன்பு கடும் மழை பெய்தது. பெரும் வெள்ளத்தில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, வெயில் வாட்டியது. வெயில் கொடுமையாலும் பலர் உயிரிழந்தனர். தற்போது ஜப்பானின் மேற்குப் பகுதியில் புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்த புயல் காற்றினால் ஜப்பானின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த புயலுக்கு ஜாங்ட்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. அதிதீவிர புயல் காரணமாக பொது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் மேற்க்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்த நிலையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நில சரிவு ஏற்படும் என்றும் வானிலை அதிகாரிகள் கூறினர்.

"பலத்த காற்றும் வெள்ள பெருக்கும் வருவதற்குள் தாழ்ந்த பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும். மக்கள் அவர்களின் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள முன்னதாகவே வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்வது நல்லது" என்று கூறினார் ஹிரோஷிமாவின் ஆளுநர் ஹைடிக்ஹோ. அதேநேரத்தில் புயல் காரணமாக இரண்டாம் நாளான இன்று விமான சேவைகளும் ரயில் சேவைகளும் ஜப்பானின் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டு வீடுகள் இருளில் மூழ்கின. ஆயிரக்கணக்கான மக்கள் தாழ்வான பகுதிகளிலிருந்து மீட்க பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர். புயல், வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு பணிகளும் நிவாரண பொருட்கள் வழங்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close